இன்னும் ஒருவிசை ONCE MORE CHICAGO ILLINOIS U.S.A. 63-08-04 வில்லியம் மரியன் பிரான்ஹாம் இன்னும் ஒருவிசை ONCE MORE 63-08-04 Chicago Illinois U.S.A. 1. மிக்க நன்றி. நாம் ஜெபம் செய்வோம். பரலோகப் பிதாவே, கர்த்தராகிய இயேசுவிட முள்ள எங்கள் அன்பை ஆராதனையில் மீண்டும் வெளிப்படுத்தும்பொருட்டாக, உமது நேச குமாரனா கிய, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் மறுபடியும் ஒன்றுகூடியிருக்கிறோம். அவருடைய ஆவியானவர் எங்களைச் சந்தித்து, இந்தப் பிரயாணத்தை முடிக்கவும் எங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் போராட்டமாகிய இந்த விசுவாச போராட்டத்தை போராடவுமான தாங்கிப்பிடிக்கும் கிருபையை எங்களுக்குத் தருகிற அந்த ஆவியின் ஓர் பாகத்தை அவர் எங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தருள வேண்டு மென்று நாங்கள் ஜெபிக்கிறோம். இதை அருளும், பிதாவே. எங்களை பலப்படுத்தும் பொருட்டு, இந்த பிற்பகலில், ஜீவ அப்பத்தை எங்களுக்குப் பிட்டுத் தாரும், "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்று எழுதியிருக்கிறது. இந்தப் பிற்பகலில், நாங்கள் தாமே அதைக் கேட்போமாக, இயேசு கிறிஸ்து வின் நாமத்தில். ஆமென். 2. உட்காருங்கள். சகோதரன் கார்ல்சன் அவர் களைக் குறித்து கருத்து தெரிவிப்பது என்பது, அவர் அப்படியே ஏறக்குறைய பத்து நிமிடங்கள் தாமதமாக என்னைப் பேச அனுமதித்தார். அவர் சிறப்பாகிக் கொண்டே வருகிறார். இன்னொரு வார கூட்டத்தில், நாம் சரியாக... நான் இங்கே பெரும்பாலும் நேரத்தோடே இருப்பேன்...?... இந்த சிலாக்கியத்திற்காக நாங்கள் மிகவும் சந்தோஷமாயிருக்கிறோம். 3. இப்பொழுது இன்றிரவானது இக்குறிப்பிட்ட ஆராதனையில் நமது கடைசி இரவாக உள்ளது, நான் உங்களை நேரத்தோடே போக விட விரும்புகிறேன், அப்பொழுது தான் உங்கள் - உங்கள் இரவுணவை (supper) உங்களால் புசிக்க முடியும். உங்களில் நிறைய பேர் அதை சாயங்காலம் அல்லது மத்தியானத்தில் புசிக்கும் உங்கள் பிரதான உணவு (dinner) என்றே அழைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் சாயங்காலம் அல்லது மத்தியானத்தில் புசிக்கும் பிரதான உணவை (dinner) தான் நான் புசித்திருந்தால், அப்பொழுது என்னுடைய இரவுணவை எங்கே பெற்றுக்கொள்கிறேன்? 4. இப்பொழுது, நான் ஒரு மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தேன், அவர், "ஓ, சகோதரன் பிரன்ஹாமே, அது-அது சாயங்காலம் அல்லது மத்தியானத்தில் புசிக்கும் பிரதான உணவு (dinner) தான்" என்றார். 5. "ஓ, அப்படியா?" நான், "நீர் தவறாக இருக்கிறீர் என்று நான் உமக்கு நிரூபிக்க விரும்புகிறேன். நாம் கர்த்தருடைய மதிய உணவை (Lord's dinner) எடுப்பதில்லை; நாம் அவருடைய இரவுணவைத்தான் (supper) எடுக்கிறோம்" என்று சொன்னேன். (I said, "We don't take the Lord's dinner; we take His supper.") 6. அவ்வாறு நாம் - நாம் அதைக் குறித்து சிந்தித்துப்பார்க்க விரும்புகிறோம், கர்த்தரைப்போன்று, நம்முடைய இரவுணவைப் போன்று, கர்த்தருடைய இரவுணவு (இராப்போஜனம் - மொழிபெயர்ப்பாளர்) என்பது அந்த இரவில் தான், காலை நேரத்திலோ அல்லது பிற்பகலிலோ அல்ல. அவர், அவர் அதை சாயங்காலத்தில் தான் எடுத்தார், அதுதான் அவருடைய இரவுணவாக இருந்தது (He, He took it in the evening, it was His supper). 7. இப்பொழுது, எனவே நாம் முன்கூட்டியே திரும்பிச்செல்ல விரும்புகிறோம். எனவே நாங்கள் இன்றிரவு தாமதப் படுத்தமாட்டோம், சகோதரன், கார்ல் சன். அவர்கள் இன்றிரவில் என்னை சரியாக மிகச் சரியான நேரத்தில் பேச அனுமதிக்கப் போகிறார். "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் பொருளாக உள்ளது. (Faith is the substance of things hoped for.)" எனக்குத் தெரியவில்லை, கர்த்தருக்குச் சித்தமானால், எனக்கு கொஞ்சம் போதுமான நேரம் கிடைக்கக் கூடுமானால், இறங்குவரிசையில் எண்ணுதல் என்பதன் பேரில் இன்றிரவில் பேச முயற்சிப்பேன். அது கடைசி நாட்களுக்காக கர்த்தர் எனக்குக் கொடுத்திருக்கிற விஞ்ஞான சம்பந்தமான, ஒரு சிறிய செய்தியாகும். ஒருக்கால், கர்த்தருக்குச் சித்தமானால், இன்றிரவிலே அதன்பேரில் நான் பேசக்கூடும். 8. இப்பொழுது, சென்ற இரவில் நமக்கு மாபெரும் நேரம் உண்டாயிருந்தது. நான் போய், "நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப்போவதில்லை" என்று சொன்னேன், கர்த்தரோ எப்படியும் வியாதியஸ்தரைச் சுகப் படுத்தினார், நீங்கள் பாருங்கள். ஆமென். சிலசமய ங்களில் நாம் ஏதோவொன்றைக் கூறலாம், ஆனால் கர்த்தரால், தாம் விரும்பும் எந்த நேரத்திலும் அப்படியே அதை தலைகீழாக மாற்ற முடியும். நீங்கள் பாருங்கள், அவர்-அவர் தேவனாயிருக்கிறார். 9. இந்தப் பிற்பகலில் நமக்கு ஒரு உதவியாக இருக்கலாம் என்று நான்-நான் எண்ணின ஒரு சிறு தலைப்பிற்காக (text), இப்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து துரிதமாக வாசிக்க விரும்புகிறேன். 10. இப்பொழுது, சரியான நேரத்தில் அவர் என்னை பேச அனுமதிப்பாரானால், சரியான நேரத்தோடே வெளியே போக முயற்சிக்க விரும்புகிறேன், அது ஏறக்குறைய 4:30 மணியாக இருக்கும், அது இப்போதிலிருந்து ஏறக்குறைய ஐம்பது நிமிடம் இருக்கும். 11. நாம் வார்த்தைக்கு கவனம் செலுத்துகையில், இப்பொழுது நாம் நியாயாதிபதிகளின் புஸ்தகம் 16-ம் அதிகாரத்திற்குத் திருப்பி, 27-ம் மற்றும் 28-ம் வசனங்களை வாசிப்போம். அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந் திருந்தது; அங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும், வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஓ கர்த்தாவே... நான் என் இரண்டு கண் களுக்காக... பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படி, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், ஓ கர்த்தாவே, என்னைப் பலப்படுத்தும் என்று உம்மிடம் மன்றாடுகிறேன் என்று சொல்லி, (ஆங்கிலத்தில் உள்ளபடியே - மொழிபெயர்ப்பாளர்) 12. நாம் மீண்டும் ஜெபம் செய்வோம். கர்த்தராகிய இயேசுவே, இந்தச் சிறு தலைப்பை எடுத்துக்கொண்டு, அதை வைத்து சபைக்கு தண்ணீர் ஊற்றும், கர்த்தாவே. நாங்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபித்து இதை உம்மிடம் ஒப்புவிக்கிறோம். ஆமென். 13. அந்தப் பிற்பகல் வேளையில் அவ்விருவரும் அந்த வட்டரங்கத்தினுள் நுழைந்தபோது, அங்கே நிச் சயமாக ஏறக்குறைய 3000 பெலிஸ்தியர்கள் இருந்து கொண்டு, இம்மகத்தான அரங்கின் மேல்தளப்பகுதி யின் உச்சியிலிருந்து கீழே நோக்கிப்பார்த்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். அது நிச்சயமாக ஒரு உஷ்ணமான நாளாக இருந்திருக்க வேண்டும். நாள் முழுவதும் அவர்கள் அங்கே வெளியில் இருந்து கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு நாய்க்குடை (காளான் - மொழிபெயர்ப்பாளர்) தலைகீழாக இருப்பது போன்ற வடிவிலுள்ள ஏதோவொன்றாக கட்டப்பட் டிருந்த, இந்தப் பெரிய அரங்கின் உச்சியிலே (இருந்த) இந்தப் பெரும் ஜனக்கூட்டத்தில், மிகவும் கம்பீரமான தலைமை இராணுவத் தலைவர்களும் அணிகலன்க ளால் அலங்கரிக்கப்பட்ட அவர்களுடைய அழகு வாய்ந்த பெண்களும் இருந்தனர். மையத்திலிருந்த நடு தூணானது, இந்த விதமான ஏதோவொன்றாக வெளியே நீண்டிருந்து, சுற்றிலுமிருந்த பார்வையாளர்கள் எல்லாரையும் தாங்கிக்கொண்டிருந்த இரண்டு தூண்களை பிடிப்பில் வைத்திருந்தது. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் தெளிவாக பார்க்க விரும்பி, எல்லாரும் இந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியின் நேரே முன்னோக்கி குனிந்து கொண்டிருந் தார்கள். 14. மிக முக்கிய நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாக நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளாகிய (preliminaries), எல்லா பொழுதுபோக்குகளும் அங்கே நடந்து கொண்டிருந்தன. அவர்கள் அநேகமாக சிறு குறும்புச் செய்கைகளைச் செய்யும் சிறிய குரங்குகளை உடையவர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் தங்களை பொழுதுபோக் கிக்கொள்ள வெவ்வேறு காரியங்களைக் கொண்டிருந்தார்கள், அவர்கள் நாள் முழுவதும் பொழுதுபோக்கிக் கொண்டிருந்த, சண்டையிடுதல், மல்யுத்தம், ஒருக்கால் மரணமடையும் வரையில் இருவருக்கிடையே நடக்கும் சண்டை (dueling), மேலும் மற்ற அநேக காரியங்களை உடையவர்களாயிருந்தார்கள், அது ஒரு மகத்தான நாளாக இருந்தது, ஆனால் இப்பொழுதோ மிக முக்கியமான நிகழ்ச்சி வருகிறது. 15. மிக முக்கிய நிகழ்வு நடப்பதற்கு முன்பாக நிகழ்த்தப்படும் நிகழ்வுகள் (preliminaries) நடந்து கொண்டிருக்கையில், நாமெல்லாரும் எவ்வாறு பொறுமையாக காத்துக் கொண்டிருப்போம் என்பது உங்களுக் குத் தெரியும். அவர்களும் மிக முக்கியமான நிகழ்ச்சிக் காக காத்துக் கொண்டிருக்கிறார்கள், அப்போது ஒவ்வொருவரும் அமர்ந்து கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். நாம் நம்முடைய-நம்முடைய பாடல் பாடுதல், நம்முடைய சாட்சிகள், பிரசங்கம் மற்றும் அதைப் போன்றவைகளைக் கொண்டிருக்கும்போது, நமது மத சம்பந்தமான ஆராதனைகளில் அதைக் கவனிக்கிறோம்; ஆனால் மிக முக்கியமான நிகழ்ச்சியானது கர்த்தர் என்ன செய்யப்போகிறார் என்பதைக் காண்பதும், அவர் எதற்காக நம்மை ஒன்றுகூட்டியிருக்கிறார் என்பதை காண்பதும் தான். சரியாக மிக முக்கியமான நிகழ்வாகிய, அந்த முடிவு என்னவாக இருக்கப்போ கிறது என்பதைக் காணவே நாமெல்லாரும் எதிர்பார்ப்புகளின் கீழ் இருக்கிறோம். எதிலும் அந்தவிதமாகத் தான் இருக்கிறது. நாம் எப்போதுமே அந்த மிக முக்கியமான நிகழ்விற்காக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறோம். 16. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காண, அவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியோடு எதிர் நோக்கி எழுகிறார்கள், காரணம் என்னவென்றால் அந்த மிக முக்கிய நிகழ்ச்சி அவர்களிடமாக கொண்டு வரப்பட்டுக் கொண்டிருந்தது, அவர்கள் கண்டது என்னவென்றால் ஒரு சிறுவனால் வழிநடத்தப்பட்டு கொண்டிருந்த ஒரு குருடான மனிதனைத் தவிர வேறெதுவுமில்லை. 17. குடிபோதையில் களியாட்டம் (கேளிக்கை விருந்து, பெருவிருந்து - மொழிபெயர்ப்பாளர்) நடத் திக்கொண்டு, பிற்பகல் முழுவதுமே அந்த அரங்குகள் எதிரொலித்துக் கொண்டிருந்தது, அழகானவர் களாயும், முகம் உதடுகள் போன்றவற்றில் வர்ணங்களை பூசிக் கொண்டும், அணிகலன்களால் அலங்கரித்துக் கொண்டுமிருந்த அவர்களுடைய பெண்களும், பெரும் கம்பீரமான இராணுவ சேனாதிபதிகளும் மற்றும் எல்லாருமே எப்படியாக விஸ்கி மதுபானத்தையும் மற்றும் அவர்களுடைய உயர் மதுபானங்களையும் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு பெரிய கொண்டாட்டமாயிருந்தது. அவர்கள் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். ஓ, நான் இதைச் சொல்ல எவ்வளவாய் வெறுக்கிறேன்! தேவனுடைய ஊழியக்காரனின் மேல் மீன் தேவனாகிய தாகோனுக்குக் கிடைத்த வெற்றி. அதைச் சொல்ல வேண்டியிருப்பது என்பது, அது அப்படியே கீழே என்னுடைய அடிப்புறத்திற்கு நேராகப் போகிறது, ஆனால் அது சத்தியமாயுள்ளது. அப்படிப்பட்ட அதைப்போன்ற ஒருவிதத்தில் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள், யேகோவாவின் ஊழியக்காரன் மேல் கிடைத்த ஒரு வெற்றி. என்னவொரு வெட்கக் கேடான காரியம்! குடித்தலும், களியாட்டமும், முக ஒப்பனை பொருட்களைப் பூசிக்கொண்டிருந்த பெண் களும், முழுவதும் அணிகலன்களால் அழகு செய்யப் பட்டவர்களும், பெரிய கௌரவமானவர்களும் (இரு க்க - மொழிபெயர்ப்பாளர்), அந்த மீன் தேவனின் கீழே அக்கினிகள் எரிந்துகொண்டிருக்க, அது என்னவொரு கொண்டாட்டமாக இருந்திருக்க வேண்டும். 18. ஆனால் இருதயத்தை உடைக்கும் பாகம் என்னவென்றால், சென்றுபோன காலத்தில் நிகழ்ந்த அதைப்போன்ற அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை ஆயிரக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கையில், அவர்கள் அஞ்ஞானிகளாக இருந்ததின் நிமித்தம் அந்த தேசத்தை அழித்துப்போட தமது இருதயத்திலே நோக்கம் கொண்டிருந்த, பரலோ கத்தின் மகத்துவமான தேவன், அந்த வேலையைச் செய்ய ஒரு மனிதனை அனுப்பியிருக்கும்போது, இங்கேயோ யேகோவாவின் ஊழியக்காரனின் மேல் பெற்ற ஒரு வெற்றியை மீன் தேவனாகிய இந்த விக்கிரகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. யேகோவா ஒருபோதும் தோல்வியடையவில்லை; அதைச் செய்யும்படி அவர் அனுப்பின அந்த ஊழியக்காரன் தான் வெற்றி யை இழந்துபோனான். 19. என்னவொரு காட்சி, அது என்னவொரு வெட்கக்கேடான காரியமாக இருந்தது! அந்த அரங்கின் குறுக்காக தடுமாறிக்கொண்டிருந்த இந்தக் குருடான மனிதனை அந்த சிறு பையன் மையத்திலிருந்த இந்தப் பெரிய தூண்களை நோக்கி வழிநடத்திக் கொண்டிருந்தான், ஒரு நாய்க்குடை (காளான் - மொழிபெயர்ப் பாளர்) தலைகீழாக இருப்பது போன்ற வடிவிலுள்ள அல்லது குடைபோன்றிருந்த இந்தப் பெரிய எல்லாமே இந்தப் பெரிய தூண்களின் மேல் தான் அமைக்கப்பட்டிருந்தது, அங்கே தான் ஜனங்கள் இந்த விதமாக கீழ்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், சுவற்றில் இருந்து வெளித்தள்ளி அதற்குப் பாதுகாப்பாக இருக்கும் மகத்தானது போலிருக்கிற அந்த சதுரத் தூண்கள் உயரமாய் போயிருக்க, ஒழுங்கோடு சீராக அமைக்கப் பட்டு அக்காரியத்தை பிடிப்பில் வைத்திருந்தது, இன்று மறுபடியுமாக மீண்டும் உண்டாக்க முடியாத கல் மூலமாக வைக்கப்பட்டிருந்தது. அதை யாராலும் அதைப்போன்று கட்ட முடியாதிருந்தது. ஆனால் அது என்னவொரு மகத்தான காரியமாக இருந்தது! ஒரு விக்கிரகத்தை சேவித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக் கான பிரபலம் வாய்ந்த பூசாரிகள், தங்கள் நெஞ்சுக்க ளை நிமிர்த்தினவர்களாய் யேகோவாவை வெற்றி கொண்ட தங்கள் விக்கிரகங்களுக்கு சமயசடங்குகள், மற்றும், மத சடங்குகளையும் செய்து கொண்டிருந்தார்கள். குடிப்பதும், கேளிக்கை விருந்துமாக, தொடர்ந்து நடந்துகொண்டிருந்த அது என்னவொரு மகத்தான நாளாக இருந்தது! 20. இதோ இங்கே யேகோவாவின் ஊழியக்காரன், குருடனாக, தடுமாறிக்கொண்டே, வேடிக்கை காட்டுவதற்கு, ஒரு சிறு பையனால் வழிநடத்தப்பட்டு வெளியே இந்தப் பெரிய தூணை நோக்கி வருகிறான். அந்த பொழுதுபோக்கின் மிக முக்கியமான நிகழ்ச் சியானது அத்தேசத்தை அழித்துப்போட யேகோவாவினால் நியமிக்கப்பட்ட நோக்கத்திலிருந்தே வேடிக்கை காட்ட வேண்டியதாயிருந்தது. இச்சமயத்திலும், அத்தே சமானது அவர்களை அழித்துப்போட தேவன் நியமித்திருந்த அந்தக் காரியத்தையே எடுத்து, இப்பொழுது அவர்கள் அவனை ஜெயங்கொண்டு, அவனைக்கொண்டு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தார்கள், (அது தான்) அவர்கள் கொண்டாட்டத்தில் அவர்களுடைய மிக முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. 21. அதைப் பார்க்க வேண்டியிருப்பது என்பது, அது ஏறக்குறைய அப்படியே உங்களைக் கொல்லவில்லையா?... என்ன செய்ய முடிந்திருக்கும் (could) என்பதை சிந்தித்துப் பார்க்கும்போது. உண்மையாக, இந்தக் கதையானது ஒரு போதும் சொல்லப்பட்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் இது அநேகமாக நம்மு டைய எச்சரிக்கைக்காகவே சொல்லப்பட்டு, அவ்வித மாக எழுதப்பட்டிருக்கிறது. (அவன்) இப்பொழுது அவமானப் படுத்தப்பட்டவனாகவும், உடைக்கப்பட்டவனாகவும், தோற்கடிக்கப் பட்டவனாகவும், அந்தக் கட்டிடத்தை தாங்கிக்கொண்டிருந்த இரண்டு தூண்களுக்கும் சரியாக இடையே நின்று கொண்டிருக்கிறான். 22. இந்நாளின் சபையைக் குறித்த என்னவொரு அடையாளமாக அது இருக்கிறது! நாம் இங்கு வெற்றி கொள்ள வேண்டிய அதே காரியத்தை உலகத்திற்கு முற்றிலுமாக விற்றுப்போட்டுள்ள விழுந்துபோன மனுக்குல மக்களைக் குறித்த என்னவொரு அடையாளமாக அது இருக்கிறது. அவள் கறைதிரையற்றவளாய், கழுவப்பட்டு, தன்னுடைய மணவாளனை வரவேற்கும்படி நிற்க வேண்டியிருக்கும்போது, சபையானது தன்னுடைய-தன்னுடைய ஒழுக்கங்களையும், வேதாகமத்தையும், தன்னுடைய பலத்தையும் விற்றுப்போட் டுவிட்டு சபையானது, இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபமாயுள்ளதற்கான அடையாளங்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரமான இவ்வேளையில் அவ்வண்ணமாக தன்னுடைய பட்டயத்தை சரணடைந்து ஒப்புக்கொடுத்துவிட்டு, அவமானப்படுத்தப்பட்ட நிலையில் நின்றுகொண்டிருக்கிறது. 23. தேசத்தின் மேல், இந்த தேசத்தின் மேல் இருக்கிற ஒழுக்க சீர்கேட்டின் அடையாளத்திற்கு, நாம் இங்கே காண்பது என்னவொரு காட்சியாக உள்ளது. நான் என்னுடைய வேதவாக்கியங்களோடு மிக நீண்ட நேரம் தரித்திருக்கும்படி முயற்சிக்கப் போவதில்லை, அப்பொழுதுதான் நான் துரிதமாக கடந்துசெல்ல முடியும். ஆனால் இன்று தேவனுடைய வேதாகமத்தைத் தவிர, நீங்கள் உங்கள் கரங்களை வைக்கக்கூடிய சபையோடும், தேசத்தோடும், அரசியலோடும், மற்றும் எல்லாவற்றோடும் என்னால் அதை அடையாளப்படுத்திக்காட்ட முடியும். மனுக்குலம் தாமே, ஒழுக்க நெறிமுறைகளில் சீர்கெட்டுப்போய், பயங்கரமான நிலையில் உள்ளது! 24. இன்றைக்கான செய்தியைக் கொண்டிருக்க வேண்டிய சபையின் முகத்தை நோக்கி தங்கள் விரலை சுட்டிக்காட்டி, "இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?" என்று அவர்களிடம் கேட்கக்கூடிய நாத்திகர்கள் (கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் - மொழிபெயர்ப் பாளர்) மற்றும் அவிசுவாசிகளின் கீழே (இருக்க), அவர்களிடமோ (அதற்கான) பதில் இல்லை. அவர்களிடம் பதில் கிடையாது. ஏன்? சிம்சோன் செய்தது போலவே அவர்களும் செய்திருக்கிறார்கள். அவர்கள் சரணடைந்துவிட்டார்கள். 25. இவ்வாறாக அங்கே நின்றுகொண்டிருக்கும் அவனைப் பார்த்து, நாம், "அப்படியானால் இவன் தான் சிம்சோனா?" என்று கேட்டிருப்போம். இந்த மகத் தான, பலம்பொருந்திய யுத்தவீரன், அதைக்குறித்த ஒரு காட்சியை நாம் பார்க்கப்போவோம். அகன்ற தோள் களும், பெரிய கட்டமைப்பும் இருந்ததாக அவனை இந்த பிற்பகல் வேளையில், நாம் கற்பனை செய்து பார்ப்போம். பரலோகத்தின் மகத்துவம் பொருந்திய தேவன் அதை கீழ்நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்க, குருடாகவும், சிறு கயிற்றினால் கட்டப்பட்டவனாகவும், தளத்தின் நடுப்பகுதியை நோக்கி நடத்திசெல்லப் பட்டவனாகவும், அவமானப்படுத்தப் பட்டவனாகவும், உடைக்கப்பட்டு போனவனாகவும், தோற்கடிக்கப் பட்டவனாகவும் இருந்த இந்தப் பெரிய பருமன்கொண்ட மனிதன் இதோ அங்கே நின்றுகொண்டிருக்கிறான். இதோ, அவனைக் விமர்சனம் செய்பவர்களும், குடி போதையிலுள்ள படைவீரர்களும் கீழே நோக்கிப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 26. அவர்கள் அங்கே நின்றுகொண்டிருக்கையில், அவனுடைய பெயரைக் கேட்கும்போதே, அநேக பெலிஸ்தியர்கள் மிகவும் பயந்து நடுங்க கூட செய்து விடுவார்கள் என்பதை நான் கற்பனை செய்துபார்க் கிறேன். ஒருகாலத்தில், சிம்சோன் என்பது வல்லமை யான பெயராய் இருந்தது; அவ்வாறே கிறிஸ்தவத்திற்கும், சபைக்கும் இருந்தது. நான் இதை, இந்த காட்சியை சபையோடு இணைத்துக்காட்டப் போகிறேன். சிம்சோன் என்றாலே, ஜனங்கள் அப்படியே மயக்கமடைந்து விடுவார்கள், அவர்கள் அவனைப் போன்ற ஒரு மனிதனை ஒருபோதும் கண்டதே இல்லை என்ற மாதிரியான ஏதோவொரு மனிதனாக அவன் இருந்தான். உலகம் எப்பொழுதும் கொண்டிருந்த எதற்கும் அப்பால் அவனுடைய பலம் இருந்தது. அதற்கு நிகராகக் கூடிய எதுவும் அவர்களிடம் இல்லாதிருந்தது. அவன் அந்நிலையில் அங்கே நின்று கொண்டிருப்பதை அவர்கள் காண்கையில், அநேகர் அவனை நினைவுகூர்ந்தார்கள். 27. அமர்வதற்கான அந்த மேல்தளப் பகுதிகளிலிருந்து அநேகர் அவனை நோக்கி, நினைவுகூர்ந்து வேறொரு நிலையில் அவன் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ஒருநாள், ஆயிரம் பெலிஸ்தியர்கள் அவனைச் சுற்றிலும் கிடக்க, அவர்கள் பாதுகாப் பிற்காக கன்மலைகளை நோக்கி தப்பி ஓடிப்போயிருந்தபோது, தனது கரத்தில் கோவேறு கழுதையின் தாடை எலும்பை வைத்துக்கொண்டு அவன் நின்று கொண்டிருந்தான்; அப்போது அவன் நின்றுகொண்டு, "இதில் கொஞ்சம் உங்களுக்கும் வேண்டுமானால், வாருங்கள்!" என்றபடி, தன்னுடைய விரல்களை அசைத்துக் காட்டினான். ஆனால் இப்பொழுதோ அவனைப் பாரு ங்கள். 28. ஒரு இரவிலே, அவன் ஒரு வேசியின் மூலமாக இணங்கவைக்கப்பட்டு, காசா பட்டணத்திற்குள் இருந்தான், பெலிஸ்தியர்களில் அநேகராகிய, அவர்கள் டன் கணக்கில் எடையுள்ள மிகப்பெரிய வாயிற்கதவை எடுத்துவந்து, அவனை அடைத்து வைத்து, அவனைப் பிடித்து, படைவீரர்களிடம் வரும்படி ஆளனுப்பி, "இப்பொழுது நாங்கள் அவனைப் பிடித்துவிட்டோம். நாங்கள் அவனை சுற்றிவளைத்து எங்கும் போகாமல் தடுத்து வைத்திருக்கிறோம்" என்றார்கள். பிசாசு எப்போதும் செய்ய முயற்சிப்பது போன்று, உங்களை ஏதோவொன்றில் நெருக்கமாக சுற்றிவளைத்துக்கொள் வது. 29. ஆனால் சிம்சோன் அடுத்தநாள் காலையில், அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், அந்த இரவில் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டபோது, தான் சுற்றி வளைக்கப்பட்டு எங்கும் போகாமல் தடுத்து வைக்கப் பட்டுள்ளதை கண்டான் என்பதை நினைவு கூருங்கள். அவன் தன்னுடைய தலையின் பின்னாலிருப்பதை உணரமுடிந்து, அவன் இன்னுமாக தேவனுடைய உடன்படிக்கையின் குமாரன் தான் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது, அவனை சுற்றிவளைத்து எங்கும் போகாமல் தடுக்க அங்கே எதுவுமே இருக்க முடியா திருந்தது. ஒருகாலத்தில் சபையும் கூட அவ்விதமாகத் தான் நின்றுகொண்டிருந்தது. அவன் என்ன செய்தான்? அவன் எழுந்து, கீழே தெருவில் நடந்துசென்று, வாயிற் கதவுகளை அது பொருத்தப்பட்டிருந்த பிடிப்பான்களை விட்டு பின்னுக்கு இழுத்தெடுத்து, தன்னுடைய தோள்களின் மேல் அதை வைத்து மேலே அந்த மலையின் ஊச்சிக்கு நடந்துசென்று கீழே வைத்தான். 30. அந்த பிற்பகல் வேளையில், அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தவர்களாக அநேகர் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் இப்பொழுது அவனைப் பாருங்கள், குருடனாகவும், பரிகசிக்கப்பட்டும், வெறுமனே சத்துருவுக்கு ஒரு பொழுதுபோக்காகவும் இருக்கிறான். அவன் ஒருகாலத்தின் தனது பாதுகாப்பிற்காகவும், இவ்வுலகத்திலே அவன் செய்யும்படி பிறந் திருந்த தேவனுடைய அருஞ்செயலுக்காகவும் வைத்திருந்த அவனுடைய வல்லமைகள் யாவும், ஒரு பெண்ணின் மூலமாக அவனிடமிருந்து உரிக்கப்பட் டிருந்தன. 31. அதே காரியத்தை கிறிஸ்துவின் மணவாட் டியாக இருப்பதாக பாசாங்கு செய்து, "தன்னுடைய அருவருப்புகளும், வேசித்தனங்களுமாகிய அசுத்த முள்ள ஒரு கோப்பையைக் (cup)" கொண்டு தன்னுடைய போதகத்தை ஆதாரமாக்கியுள்ள ஒரு ஸ்திரீ யோடு இன்றைக்கும் பொருத்த முடியும் என்று நான் நினைக்கிறேன். மாற்கு 16-ல், இயேசுவின் கடைசி கட்டளையாக, செய்ய வேண்டியிருந்த தேவனுடைய அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பிக்கும்படிக்கு எழுப்பப்பட்டிருக்கிற தேவனுடைய சபையின் வாய்களுக்குள்ளே அவள் தன்னுடைய வேசித்த னங்களின் கோப்பையை சாய்த்து கொடுக்கிறாள். அவள் தேவனுடைய சிறு, உண்மையான குழுவை எடுத்து, அவள் தனக்கு தானே செய்துகொண்ட விதமாகவே அப்படியே மிகச்சரியாக அவர்களை ஒன்றாக ஸ்தாபனமாக்கி, அவர்கள் உரியப்பட்ட வர்களாக நிற்கும்படி செய்து, அதன் வல்லமையை மறுதலித்து, பரிசுத்த ஆவியையும் மறுதலித்து, அந்நிய பாஷைகளில் பேசுவதற்கான வல்லமையையும் மறுதலித்து, மரித்தோரை உயிரோடெழுப்பவும், வியாதியஸ்தரை சுகமாக்கவும், பிசாசுகளைத் துரத்தவுமான பரிசுத்த ஆவியின் வல்லமையையும் மறுதலிக்க வைத்திருக்கிறாள் என்பதை நாம் இப்பொழுது கண்டுகொள்கிறோம். உரிந்துபோடப்பட்டவர்களே, இப்பொழுது பெலிஸ்தியர்கள் உங்கள் மேல் வந்து விட்டார்கள், உரிக்கப் பட்டவர்களாக இப்பொழுது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஓ, அந்த மனிதனுடைய மனதினூடாக என்ன கடந்துபோயிருக்க வேண்டும்! 32. பெலிஸ்தியர்களுடைய மனதினூடாகவும் நிச்சயம் என்ன கடந்துபோயிருக்க வேண்டுமென்று நாம் கண்டுவிட்டோம். அவர்கள் அவனை அறிந்திருந்தார்கள். ஒருக்கால் ஒருவர் மற்றவரிடம் கரத்தை நீட்டி கொடுத்தபடி, "நீங்கள் 'சிம்சோன்' என்று சொல்லும்போதே, ஒவ்வொரு பெலிஸ்தனும் ஒரு பொந்தை நோக்கி ஓடும் எலிகளைப் போல போய்விடும் நேரம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆயிரம் மனிதர்கள் அந்த பாலைவனத்தின் குறுக்காக அணிவகுத்து போய்க் கொண்டிருந்தபோது, அவர்கள், 'சிம்சோன் வருகிறான்' என்று சொல்ல, அவர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பாதுகாப்பிற்காக அவர்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு துரிதமாக ஓடின அந்த நேரத்தைக் குறித்து, நீ சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்" என்று சொல்லுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். 33. ஆனால் இப்பொழுது அவனை நோக்கிப் பாருங்கள். அவன் ஒரு பயங்கரமான நிலையில், கட்டப்பட்டவனாக இருக்கிறான், இவை எல்லாமே அவன் ஒரு பெண்ணோடு சமரசம் பண்ணிக் கொண்டதின் நிமித்தமாகத்தான். அதுதான் அதைச் செய்தது. அவள் அவனுடைய பலத்தை அவனிடமிருந்து உரித்து போட்டுவிட்டாள். அவனுடைய பலம் எங்கேயுள்ளது என்பதை கண்டறிய அவள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவன் ஒரு பெரிய மனிதன் என்ப தை அவள் அறிந்திருந்தாள், ஆனால் அவர்களிடமும் கூட பெரிய மனிதர்கள் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் இந்த தெலீலாள், அவள் ஒரு - ஒரு உண்மையான யேசபேலாக இருந்தாள். அவன் அவளிடம் காதல்புரிந்து, அவன் அவள் அவனை நேசிக்கிறாள் என்று சொல்ல வைக்க அவனிடம் எப்படி நடந்துகொள்வது என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், எல்லா நேரமும், உடன் சேர்ந்து அவனுடைய பலம் எங்கேயிருந்தது என்பதை கண்டுபிடிக்க அவள் முயற்சித்துக்கொண்டேயிருந்தாள். 34. யேசபேல் அதே காரியத்தைத் தான் சபைக்கும் செய்திருக்கிறாள், பலம் எங்கேயிருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் வரையில் தந்திரமாக தேடப்பட்டது. அந்த பலம் வார்த்தையில் தான் இருக்கிறது. "வார்த்தை தான் தேவன்." இறுதியாக அந்த பலம் எங்கேயிருக்கிறது என்பதை அவள் கண்டுபிடித்து, அவள் அவனை நிசேயா, ரோமாபுரிக்குக் கொண்டு போய், அவனுடைய ஜடைகளை மழித்து சவரம் செய்து எடுத்துவிட்டாள். இப்பொழுதும் அதில் மீதியாக இருந்தவை களையும் எடுத்து, அவைகளை உலக சபைகளின் ஆலோசனை சங்கத் திற்கு திரும்ப கொண்டு போய், அவர்களுடைய ஜடைகளை மறுபடியுமாக மழித்துவிட்டாள். அது தொடர்ந்து மழிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது, இதை வெளியே எடுத்து, "இதற்கு அதுவல்ல அர்த்தம். அற்புதங்களின் நாட்கள் கடந்துபோய்விட்டன. இது, அது மற்றதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது." பலம் எங்கேயிருக்கிறது என்பதை அவர்கள், அவர்கள், கண்டுபிடித்து, கலப்படமற்ற உண்மையான தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக, ஞானஸ்நானங்களையும், கைகுலுக்குதல்களையும், இந்த மற்ற எல்லா காரியங்களையும் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். 35. உலகத்தையும் பிசாசுகளையும், வியாதியையும் தோற்கடிக்கவும், பிசாசுகளைத் துரத்தவும் தமது சபைக்கு கொடுக்கப்பட்ட இந்த வார்த்தையே தேவனாக இருக்கிறது, எந்த ஸ்தாபனமும் சபைக்குக் கொடுக்கப் படவில்லை. வார்த்தை தான் சபைக்குக் கொடுக்கப்பட்டது; அதுதான் அவளுடைய பலமாக இருக் கிறது. ஆனால் ஒரு கத்தோலிக்க சகோதரி மயிரை கத்தரித்து எடுத்து விடுவதைப்போன்று அவள் இன்றைக்கு மயிர் கத்தரிக்கப்பட்டவளாய் நிற்கும் அளவுக்கு, அவள் தன்னுடைய உபதேசத்திற்காக மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒரு பிரிவு கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு, அவள் செய்வாள் என்று தீர்க்கதரிசி சொன்னதை அப்படியே மிகச்சரியாக அவள் செய்யும் அளவுக்கு, அவர்கள் இதையும், அதையும் கத்தரித்து எடுத்துவிட்டார்கள், அவர்கள் இந்த ஜடையையும், அந்த ஜடையையும் மழித்து எடுத்துவிட்டார்கள். இதோ இன்றைக்கு அவள் அவமானப்படுத்தப்பட்டவளாக நின்று கொண்டிருக்கிறாள். பரலோகத்தின் தேவன் படிப்பறிவில்லாத மீன்பிடிப்பவர்களையும் அதைப் போன்ற மற்றவர்களையும் தெரிந்துகொண்டு, அதற் குள்ளே இறங்கிவந்து, அவர் இன்னும் மாறாமல் தேவனாகவே இருக்கிறார் என்று நிரூபித்து காட்டி இருக்கும் வேலையில், அது எந்த ஸ்தாபனத்தோடும் இணைக்கப்படாமல் இருக்கும் காரணத்தினால், அதற்கான ஒரு பதிலை அவர்களால் தங்கள் சபையோ ருக்குக் கொடுக்க முடியாமல் இருக்கிறது. அவள் தன்னுடைய பலத்திலே நிற்க வேண்டிய இடத்திலேயே அவள் அவமானப்படுத்தப்பட்டவளாக நின்று கொண்டிருக்கிறாள். 36. சபையானது பெந்தெகோஸ்தே நாளில் நின்றது போல, இன்றைக்கும் நின்றுகொண்டிருக்குமானால், சபையானது ஐரினேயஸின் நாட்களில் நின்றது போலவும், பரிசுத்த மார்டினின் நாட்களில் நின்றதுபோலவும், அல்லது பாலிகார்பின் நாட்களில் நின்றது போல நின்றிருக்குமானால், சபையானது தேவனுடைய எந்த ஒரு வார்த்தையையும் புறக்கணிப்பதற்கு முன்பாக, சரியாக மரணத்தினூடாக அணிவகுத்து செல்ல முடியும்! ஐரினேயஸ், மார்ட்டின், அந்த எல்லா மனிதர்களும், இயேசு கிறிஸ்துவின் நாமத்திலுள்ள அந்த தண்ணீர் ஞானஸ்நானத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தார்கள். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை யும், தீர்க்கதரிசிகளையும், அடையாளங்களையும் அற்புதங் களையும் அவர்கள் ஒவ்வொருவருமே உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தார்கள். 37. இன்றைக்கோ அவர்கள் அதை விட்டுத் தூரமாகப் போய்விட்டார்கள். என்ன நடந்தது? பலம் எங்கேயுள்ளது என்பது தெலீலாளுக்குத் தெரிந்துவிட்டது. அவளால் எப்பொழுதும் அந்த வேதாகம கல் லூரிகளை அந்த வார்த்தையை விட்டு தூரமாக கொண்டு சென்று, அவள் கொண்டிருந்த, மனிதனால் உண்டாக் கப்பட்ட ஏதோவொரு வேதசாஸ்திரத்தின் மேலே கொண்டுவர முடிந்ததால், அப்பொழுது அவர்களை கட்டி உலக சபைகளின் ஆலோசனை சங்கத்திற்குள், இந்த உலகளாவிய ஆலோசனை குழுவிற்குள் வழி நடத்துவது எளிதாயிற்று. நீங்கள், "உமக்கு எந்த உரிமையும் கிடையாது" என்று சொல்லலாம். 38. நான் இன்னுமாக அமெரிக்க குடிமகன் தான். பேச்சு சுதந்திரத்திற்கான உரிமை எனக்குண்டு. அது சரியே. நிச்சயமாக எனக்குண்டு. கவனியுங்கள், அது முற்றிலும் சத்தியமாக உள்ளது. 39. ஓ, அவன் அங்கே குருடாக நின்றுகொண்டிருக்கையில், அவன் எப்படியாக உணர்ந்திருக்க வேண்டும், அந்த மனிதனுடைய சிந்தையினூடாக என்ன கடந்து போயிருக்கும்! 40. இப்பொழுது, அவள் எப்பொழுதாவது அவனுடைய கண்களை பிடுங்கி எடுக்க முடியுமானால், அதுவே அதன் முடிவாக இருக்குமென்று யேசபேல் அறிந்திருந்தாள், அல்லது யேசபேல் அல்ல, ஆனால் தெலீலாள் அறிந்திருந்தாள். 41. இந்தக் கடைசி நாளின் தெலீலாளும், மிகச்சரியாக சபைக்கு அதைத்தான் செய்திருக்கிறாள், தேவனுடைய வாக்குத்தத்தத்தை நோக்கிய அதனுடைய கண்களை பிடுங்கி, உங்களை ஏதோவொரு மிகப்பெரிய புத்திசாலித்தனமான ஸ்தாபனத்திற்கு விற்றுக்போட்டு விட்டாள். எல்லாரும், "நான் முதல் சபையைச் (First church) சேர்ந்தவன். நான் இங்கேயிருப்பதைச் சேர்ந்தவன். நான்..." என்று வாங்க (buy)... சொல்ல, விரும்புகிறார்கள். பாருங்கள், தேவனுடைய வார்த்தையை நோக்கியும், தேவனுடைய வாக்குத்தத்தத்தை நோக்கியும் இருக்கிற உங்கள் கண்களை பிசாசினால் பிடுங்கி எடுக்க கூடும் காலம் வரையில்! அது எவ்வளவு முட்டாள்தனமாக ஒலித்தாலும் பரவாயில்லை, அது தேவனுடைய வாக்குத்தத்தமாக உள்ளது. 42. இப்பொழுது, நான் சமயக்கோட்பாட்டு முறைகளை ஆதரிக்கவில்லை, நிச்சயமாக இல்லை, ஆனால் அந்த சமயக்கோட்பாட்டு முறைகள் அவர்கள் கிரியைகள் மூலமாக அறியப்படுகின்றன. அவ்வண்ணமாகவே தேவனுடைய சபையும் அதனுடைய கிரியைகள் மூலமாக அறியப்படுகிறது. ஆனால் தெலீலாள் சிம்சோனுக்கு என்ன செய்திருக்கிறாள் என்பதை தான் நான் சொல்ல முயற்சித்துக் கொண்டிருக் கிறேன். 43. இப்பொழுது சிம்சோனின் பக்கம் வருவோம், அவன் அங்கே நின்றுகொண்டிருக்கையில், அந்த மனிதனுடைய சிந்தையினூடாக என்ன போயிருக்க வேண்டும். ஒருகாலத்தில் அவன் கொண்டிருந்த மகத் தான வெற்றிகள் எல்லாம் அவனுடைய சிந்தையினூடாக கடந்துசென்றிருக்க வேண்டும். இப்பொழுது அந்த நிகழ்ச்சி நெருங்கிவிட்டது, அந்த பிற்பகல் வேளைக்கான பொழுதுபோக்கு துவங்கப் போகிறது. வேடிக்கை காட்டப்பட வேண்டியவர்கள் அவன் எப்படியிருந்தான் என்று சிந்தித்துக்கொண்டிருந்தனர், மேலும் இங்கே அவனும் தான் எப்படியிருந்தான் என்று சிந்தித்தவாறு இதோ நின்றுகொண்டிருக்கிறான். ஆனால் ஏதோவொரு பெண் அவனை ஆசைகாட்டி இழுத்ததன் நிமித்தமாக, அந்த காட்சி எவ்வாறு இருக்க வேண்டுமோ அதிலிருந்து மாறிவிட்டிருந்தது. அந்த தேசத்தை அழித்துப்போடவே தேவன் சிம்சோனை எழுப்பினார், அவனை எழுப்பியதன் முழு நோக்கமே அதுதான். 44. தேவனால் ஒரு மனிதனை, அவருக்கு முழுவதும் ஒப்புக்கொடுக்கக் கூடிய ஒரு மனிதனை மாத்திரம் கண்டுபிடிக்க முடியுமானால், அவருக்குத் தேவையானது எல்லாம் அவ்வளவு தான். அவருக்கு ஒரு சேனை அவசியமில்லை; அவர் ஒருபோதும் அதை உபயோகப்படுத்தியதே இல்லை. அவர் ஒரு மனிதனை மாத்திரமே உபயோகிக்கிறார். 45. இப்பொழுது, தேவன் உபயோகிக்க சிம்சோன் தன்னுடைய பலத்தை அவருக்குக் கொடுத்தான், ஆனால் அவன் தேவனுக்கு தன்னுடைய இருதயத் தைக் கொடுக்கவில்லை. அவன் தன்னுடைய இருதயத்தையோ தெலீலாளுக்குக் கொடுத்து, தன்னுடைய பலத்தை தேவனுக்குக் கொடுத்தான். 46. ஆனால் நீங்கள் ஆத்துமா, சரீரம், ஆவி, பலம், நீங்கள் இருக்கிற எல்லாவற்றையுமே தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புவித்து, அவருக்கு ஒரு சிறைக் கைதியாக வேண்டும். நீங்கள் யாரோ ஒருவரின் கைதியாகத்தான் இருக்கப் போகிறீர்கள். நீங்கள் உங்களுக் குச் சொந்தமானவர்கள் அல்ல. நீங்கள் யாரோ ஒருவரின் சிறைக்கைதியாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒன்றில் இந்த சத்தியத்தை அறிந்தும் அதற்கு ஒப்புக்கொடுக்காமல், அல்லது உலகத்திற்கு ஒரு சிறைக் கைதியாக, பிசாசின் சிறைக் கைதியாகவோ, மற்றும் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தவர்களாகவோ இருக்கிறீர்கள், ஒன்று அல்லது மற்றொன்று. நீங்கள் ஒன்றில் பாவம் செய்வதற்கு பிசாசின் சிறைக்கைதியாகவோ, அல்லது நீங்கள் நீதிக்காக தேவனுடைய சிறைக்கைதியாகவே இருக்கிறீர்கள், நீங்கள் ஒன்று இதுவாக அல்லது மற்றொன்றாகத்தான் இருக்கிறீர்கள். 47. இப்பொழுது சிம்சோன் தான் வென்ற மகத்தான வெற்றிகளைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறான். அவன் ஒரு சிறு பையனாக இருந்தபோது, தேவன் அவனை எப்படியாக நிரூபித்துக் காட்டினார் என்ப தையும், தன்னுடைய தாய் ஒரு நசரேயனைப் பெற் றெடுப்பதால், எப்படியாக அவள் செய்தாக வேண்டும் என்பதையும்; போதை தரும் மதுபானங்களை அருந்தக் கூடாது என்பதையும், அல்லது - அல்லது தன்னுடைய உணவுமுறையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தேவன் அவளிடம் சொன்னார் என்பதையும் குறித்து அவனுடைய மனதில் தோன்றியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவள் எப்படியாக அவனுடைய தலைமுடியை வாரிவிட்டவாறு, அவனிடம், "மகனே, இந்த ஜடைகளின் மூலமாக, உன்னுடைய பலம் அங்குதான் வைக்கப்பட்டிருக்கும் என்ற தேவனுடைய ஒரு உடன்படிக்கையாக அது உள்ளது. ஒருபோதும் அதை வெளிப்படுத்தி விடாதே. உன்னுடைய இரகசியத்தை ஒருபோதும் வெளிப் படுத்தி விடாதே. ஒருபோதும் அதை ஒப்புவித்து விடாதே. நீ என்ன செய்தாலும், அதனோடே தரித்திரு" என்று சொன்னாள். 48. இயேசு கிறிஸ்து சபையிடம், "வானங்களும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என்னுடைய வார்த்தையோ ஒருக்காலும் ஒழிந்துபோகாது. யார் அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப்போட்டாலோ, அல்லது அதனோடு ஒரு வார்த்தையை கூட்டினாலோ, அவனுடைய பாகம் ஜீவ புஸ்தகத்தை விட்டு எடுத் துப்போடப்படும்" என்று சொல்லியிருக்கிறார். நாம் இந்த குழப்பங்களிலும், இந்த மணிவேளையில் அப்படியே ஜெபம்... கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு முன்னதாக, எந்த நேரத்திலும், எடுத்துக்கொள்ளப் படுதலுக்காக நாம் நின்றுகொண்டிருக்கையில், இப்பொழுது சபையானது அதைக்குறித்து சிந்தித்துப்பார்க்க வேண்டும். 49. நாம் பின்னோக்கி, சென்றுபோன நட்களில், சீர்திருத்தங்களிலும், ஐரினேயஸ் மற்றும் பரிசுத்த மார்ட்டின், பாட்ரிக் மற்றும் அந்த ஸ்தாபனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் நாட்களிலுமான கடந்து போன காலங்களில் உண்மையான மகத்தான வெற்றி களை நம்மால் சுட்டிக்காட்டமுடியும். 50. லூத்தர் வெளியே வந்து, கத்தோலிக்க சபையாகிய அந்த முதலாவது ஸ்தாபனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார், அவரைப் பின்தொடர்ந்து வந்த அந்தக் குழுவினரோ சரியாக திரும்பி வந்து அவருக்கு பின்னே ஸ்தாபனமாக்கி விட்டார்கள். 51. ஜான் வெஸ்லி ஆங்கிலிக்கன் சபையின் விசுவாசம், உபதேசம், வழக்கத்தைவிட்டு வெளியே வந்தபோது, வெஸ்லி போன உடனே, அவர்கள் அவருக்கு பின்னே ஸ்தாபனமாக்கிக் கொண்டனர். 52. முற்காலத்திய பெந்தெகோஸ்தேயினர் அந்த ஸ்தாபனங்களை விட்டு வெளியே வந்தார்கள். அது உங்களுக்கு ஒரு சபிக்கப்பட்ட வார்த்தையாகத்தான் இருந்தது. ஆனால், "நாய் தான் கக்கினதற்குப் போவது போலவும், பெண்பன்றி தங்கள் சேற்றில் புரளுவது போலவும்," நீங்கள் தோற்கடிக்கப் பிறந்த, அந்தக் காரியத்திற்கே சரியாக திரும்பிப் போய்விட்டீர்கள். அல்லேலூயா! அதோ அங்கே சிம்சோனின் மேல் தாகோன் பெற்ற வெற்றியைக் குறித்து சிந்திப்பதைக் காட்டிலும் இன்னும் அதிகமாக அது என்னுடைய இருதயத்தையும் கூட புண்படுத்துகிறது. யேசபேல் எப்படியாக சபையின் மேல் வெற்றிகொண்டுவிட்டாள் என்பதை நான் காண்கிறேன். ஆகையால் தான் என்னுடைய ஜீவனிலுள்ள ஒவ்வொரு பலத்தைக் கொண்டும் ஒவ்வொரு தசை நாரைக் கொண்டும் நான் அந்தக் காரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனந்திரும்பி தன்னுடைய ஸ்தானத்திற்கு அந்த சபையை திரும்ப அழைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் தாய் மார்களும், உங்கள் தகப்பன்மார்களும், அந்த ஸ்தாபனங்களை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் அதிலிருந்து வெளியே வந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க, இங்கே அவர்களுடைய பிள்ளைகளோ சரியாக பின்னோக்கி திரும்பிச்சென்று அவர்கள் வெளியே வந்த அந்தக் காரியத்திற்கே சரியாக திரும்பிப்போய் விட்டார்கள். அது சிம்சோனைக் குறித்தும், தெலீலாள் என்ன செய்தாள் என்பதை குறித்துமுள்ள ஒரு காட்சியாக இல்லையா! 53. அந்த மகத்தான வெற்றிகளைக் குறித்த சிந்தனைகளை நாம் எப்படியாக நம்முடைய மனதினூடாக கடந்து போகவிட வேண்டும். அதற்குப் போக எனக்கு நேரமில்லை, உங்களிடம் கூறின என்னுடைய வாக்குறுதியை நான் காத்துக்கொள்கிறேன். 54. தேவன் அவனை இந்த நோக்கத்திற்காகவே எழுப்பியிருக்க, அதோ அவன் குருடாகவும், தோற்கடிக்கப்பட்டவனாகவும், அவமானப்படுத்தப்பட்டவனாகவும் அந்த இரண்டு தூண்களுக்கு இடையே நின்றுகொண்டிருக்கிறான். அவன் இன்னுமாக தான் எப்பொழுதும் இருந்த அதே பெரிய பருமனை உடை யவனாகத்தான் இருந்தான், ஆனால் அவனுடைய பலமோ போய்விட்டிருந்தது. 55. சபையும் அது எப்பொழுதும் இருந்ததைக் காட்டிலும் அங்கத்தினர்களைக் கொண்டிருப்பதில் வலுவாக உள்ள ஏதோவொன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் வெளிப்படுத்திக் காட்டப்படுகிற, பலமாகிய, வார்த்தை எங்கேயிருக்கிறது? வல்லமையை மழிக்கிற சவரம் பண்ணுகிற உங்கள் ஸ்தாபனங்கள் மூலமாக, அது உங்களைவிட்டு கத்தரித்து எடுக்கப்பட்டுவிட்டது. 56. அவன் தேவனுக்கு தவறிழைத்து நிரந்தரமாக அவரை விட்டுவிட்டான். அவன் தேவனை விட்டு விட்டது மாத்திரமல்ல, ஆனால் அவன் தன்னுடைய சொந்த ஜனங்களையும் விட்டு விட்டிருந்தான். அவன் மொத்தமாக தோல்வியடைந்திருந்தான். அவன் அழித் துப்போட வேண்டுமென்று தேவன் அவனை எழுப்பின அதே தேசத்துக்கு இப்பொழுது அவன் ஒரு சிறைக்கைதியாக இருக்கிறான். 57. சிம்சோன் தோற்கடிக்கப்பட்டது போன்றே, சபையின் கடைசி ஸ்தாபனமாகிய பெந்தெகோஸ்தேயும் இந்தப் பிற்பகல் வேளையில் இதோ நின்றுகொண்டிருக்கிறது. நீங்கள் அதை நம்பாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் வார்த்தைக்கு உங்கள் சிந்தையை திறப்பீர்களானால், அது சத்தியம் என்பதை நீங்கள் காண்பீர்கள். பொழுதுபோக்கிற்காக அவன் கண்கட்டு வித்தைகளைச் செய்து கொண்டிருந்தான். 58. சமீபத்தில், சிலசமயங்களில் நான் எப்படியாக சொல்லியிருக்கிறேன். இந்த முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்கள், நான் அவர்களையும் கூட நேசிக்கிறேன், அவர்களுடைய பத்திரிகையில், "பரிசுத்த சங்கை பிதா (Father) இன்னார் இன்னார்" என்று எழுதுகிறார்கள். பரிதாபமான, ஏமாற்றப்பட்ட, குருட்டு பெந்தெகோஸ்தேயினர்களே! உங்களுக்கு என்ன காரியம் நேர்ந்தது? நம்முடைய இரட்சகர், "இந்த பூமியில், 'பாதர் (பிதா - Father- மொழிபெயர்ப்பாளர்)' என்று எவரையும் அழைக்க வேண்டாம்" என்று சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியாதா? அங்கே அவைகளில் ஒன்றிலிருந்தும், இங்கே வெளியிலிருந்தும், உதைத்து வெளியே தள்ளப்பட்ட யாரோ ஒருவரை மாத்திரமே பிசாசு எடுத்து, அப்படியே உங்களை பரியாசப்பொருளாக ஆக்கிக்கொள்கிறான் என்பதை நீங்கள் உணருவது கிடையாதா? அவர்கள் உள்ளே பிரவேசிப்பதில்லை. அவர்கள் உள்ளே வருகிறார்கள் என்று யாராவது ஒருவர் உங்களிடம் சொல்ல அனுமதிக்காதீர்கள். 59. வஞ்சிக்கப்பட்ட இந்த சபையோடுள்ள காரியம் தான் என்ன? உலகமானது அதனுடைய கண்களைத் துளைத்துவிட்டது. அது சம்பவிக்கும் என்று இயேசு சொன்னது உங்களுக்குத் தெரியாதா? நித்திரை செய்யும் கன்னிகை எண்ணெய் வாங்க உள்ளே வரும்போது, அவள் ஒருபோதும் அதைப் பெற்றுக் கொள்ளவேயில்லை. அங்கே தான் நித்திரை செய்யும் கன்னிகை இருக்கிறாள், லூத்தரன், மெதோடிஸ்டு, பிரஸ்பிடேரியன். அவர்கள் உள்ளே பிரவேசிப்பதில்லை. அவர்கள் அந்நியபாஷைகளில் பேசி குதிக் கலாம், ஆனால் அது எதையும் அர்த்தப்படுத்துவ தில்லை. அஞ்ஞானிகள் அதே காரியத்தை செய்கிறதை நான் கண்டிருக்கிறேன், பிசாசை ஆராதிப்பவர்களும், அந்நிய பாஷைகளில் பேசி குதித்து பாடி சத்தமிட்டு, மனித மண்டை யோட்டிலிருந்து இரத்தத்தைக் குடித்து, பிசாசைக் கூப்பிட்டு அந்நிய பாஷைகளில் பேசத்தான் செய்கிறார்கள். நீங்கள் உணர்வு கிளர்ச்சியின் பேரில் சார்ந்திருக்க வேண்டாம். தேவனுடைய வார்த்தை மாத்திரமே ஒழிந்துபோகாது. 60. சிம்சோன் இப்பொழுது தோற்கடிக்கப்பட்டு, வித்தை காட்டிக்கொண்டிருப்பது போன்றே அவ்வளவு அதிகமாக அதோ அவளும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறாள். சாத்தான் எப்படியாக எழுந்து நின்று அவர்களைப் பார்த்து நகைத்து, "பாருங்கள், அவர்கள் வேதாகமத்தை விசுவாசிப்பதாக உரிமைகோருகிறார் கள். பாருங்கள்!" என்கிறான். பரலோகத்தின் தூதர்கள் எல்லாரிடமும், "பாருங்கள், பாருங்கள், அவர்கள்-அவர்கள்-அவர்கள்-அவர்கள், ஆமாம், அவர்கள், அவர்கள் ஒவ்வொருவருமே வேதாகமத்தை விசுவா சிப்பவர்கள் தான், அவர்கள் எல்லாரும் ஒருமித்து வருவதைப் பாருங்கள். நான் அவர்கள் ஒவ்வொருவரையும் சரியாக கீழே வீழ்த்தப் போகிறேன்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். வேதவாக்கியம் என்ன சொல்லுகிறதோ அப்படியே சரியாக அவர்களை உள்ளே வழிநடத்திச் செல்லத்தான் போகிறான். அவர்கள் அதைச் செய்தாக வேண்டும். அங்கே தான் அவர்கள் இருக்கிறார்கள், தோற்கடிக்கப்பட்டவர்கள். தெலீலாள்; கண்கள் துளைக்கப்பட்டிருக்கிறது, எனவே அவர்களால் சத்தியத்தைக் காண முடியவில்லை. 61. இயேசு பரிசேயர்களைப் பார்த்து, "நீங்கள் கண்களிருந்தும், உங்களால் காண முடியவில்லை. உங்களுக்கு காதுகளிருந்தும், உங்களால் கேட்க முடியவில்லை" என்று சொன்னார். ஏன்? "ஏசாயா அவ்வாறு சொல்லியிருப்பதின் நிமித்தமாக." அவர் பின்னோக்கி வார்த்தையை தான் ஆதாரமாகக் காட்டு கிறார், அந்த தீர்க்கதரிசி. இயேசு கிறிஸ்துவாகிய தேவன் தாமே, பின்னோக்கி தமது தீர்க்கதரிசியின் வார்த்தையை ஆதாரமாகக் காட்டுகிறார். 62. இன்றைக்கும் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறார். "துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள், தேவப்பிரியராயிருப்பதைக் காட்டிலும் அதிகமாக சுகபோகப் பிரியர்களாய் இருப்பவர்கள்," அழகுசாதனங்கள் பூசப்பட்ட முகங்களையுடையவர்களாய், குட்டை உடைகளை அணிகிறவர் களாய், உலகத்தாரைப் போல நடந்து கொள்கிறவர்களாய், தங்கள் தலைமயிரைக் குட்டையாக கத்தரிக்கிறவர்களாய், மற்றும் அதைப்போன்ற மற்றவைகளையும் செய்கிறவர்களாய் இருக்கிற பெண்கள், "தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, ஆனால் அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள்." நல்லது, நீங்கள் விசுவாசிக்கவில்லை என்று உங்களுடைய சொந்த கிரியைகளே நிரூபித்துக் காட்டுகின்றன. வார்த்தையிலுள்ள பரிசுத்த ஆவியானவரோ சரியாக வார்த்தையை நோக்கியே மீண்டும் திரும்ப சுட்டிக்காண்பித்துக் கொண்டிருக்கிறார். 63. "ஓ," நீங்கள், "நான் அதைப் பெற்றுவிட்டேன்" என்று கூறலாம். நீங்கள் ஒரு வியாதிக்காக மருந்தை உட்கொள்ளும்போது, அது வெளிப்படுத்தாமல் போனால், நீங்கள் உங்கள் மருந்தை மாற்றுவதுதான் நல்லது, நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள். 64. அந்த தேசமானது அளிக்கப்பட எழுப்பப்பட்ட அதே காரியம், அதே நோக்கமாகிய சிம்சோன், இப்பொழுது அவர்களுக்கு இறையாகிவிட்டான். 65. அவ்விதமே சபையும் உள்ளது! ஸ்தாபனத் துவத்தையும் ஸ்தாபனத்திலுள்ள உலகத்தையும் வெட்கத்திற்குட்படுத்தவே எழுப்பப்பட்டிருக்க, நீங்களோ சரியாக ஸ்தாபனத்திற்குள்ளேயே வந்துவிட்டீர்கள். அதைச் செய்வதன் மூலமாக, உங்களால் வேதவாக் கியங்களைப் பின்பற்ற முடியவில்லை, அவர்கள் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன, எனவே தான் நீங்கள் உங்கள் பலத்தை இழந்துவிட்டீர்கள். காண முடியாதபடி செய்துகொண்டிருக்கும் அந்தப் பிசாசு! 66. ஒரு பெண்ணின் வஞ்சக கவர்ச்சி அவனை தேவனுடைய வார்த்தையிலிருந்து கொண்டுபோக அனுமதித்தான். இப்பொழுது, நீங்கள், "சகோதரன் பிரன்ஹாமே, அது அப்படியல்ல" என்று கூறலாம். அது தேவனுடைய வார்த்தையாகத்தான் இருந்தது. தெலீலாள் சிம்சோனை வாக்குத்தத்த வார்த்தையிலிருந்து கொண்டுபோய்விட்டாள். 67. அவ்விதமே இந்நாளின் யேசபேலும் சபையை கொண்டுபோய், அதை வாக்குத்தத்த வார்த்தையிலி ருந்து, தேவனுடைய பரிசுத்த வேதாகமத்திலிருந்து வசப்படுத்திவிட்டாள். ஓ, அதே காரியம் தான், மிகச்சரியாக அதே காரியம் தான்! அவர்கள் என்ன செய்தார்கள்? யேசபேலை அனுமதித்தனர் வெளிப்படுத்தல் 17-ல் உரைக்கப் பட்டுள்ளபடி, வெளிப்படுத்தல் 17-ம் அதிகாரத்தில், கத்தோலிக்க சபையானது அங்கு குறித்துக்காட்டப்பட்டுள்ளது. அது அவர்கள் தாம் என்று அவர்களும் கூட உங்களிடம் சொல்லுவார்கள். அவர்கள் don't... அவர்களுடைய சொந்த புத்தகமே அவ்வண்ணமாகக் கூறுகிறது. அவர்கள் தயக்கமின்றி வெளிப்படையாக சொல்லுகிறார்கள். அவர்களுடைய சொந்த ஆவணத்தை எத்தனை பேர் எப்பொழுதாகிலும் வாசித்திருக்கிறீர்கள்? அது உண்மை என்று உங்களுக்குத் தெரியும். கத்தோலிக்க சபை தான் குறித்துக் காட்டப்பட்டுள்ளது என்று அவர்களே சொல்லுகிறார்கள். அது சரியே. "அவள் வேசிகளுக்குத் தாய். அவள் ஒரு வேசி என்றும் வேசிகளுக்குத் தாய்" என்றும் நினைவிருக்கட்டும். பாருங்கள், அது சபைகளாக இருந்தாக வேண்டியிருந்தது; பையன்கள் அல்ல, அது ஸ்திரீகள், புரட்டஸ்டன்ட் சபைகள், "வேசிகளுக்கு தாய்." அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட உடனேயே, அவர்கள் அங்கு செய்த அதே காரியத்தை செய்துவிட்டார்கள், அவர்கள் வார்த்தையிலிருந்து தங்களைத்தாங்களே நீக்கிகொண்டு, ஏதோவொரு ஸ்தாபனத்தின் அதிகாரக்கட்டளைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. 68. இது பிரபலம் வாய்ந்தது அல்லவென்று எனக்குத் தெரியும், ஆனால் இது சத்தியமாக உள்ளது. எனக்கு எந்தப் பெரிய வானொலி ஒலிபரப்புகளோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ, ஆதரவு கிடையாது. நான் ஒருபோதும் அவைகளைக் கொண்டிராதபடி தேவன் எனக்கு உதவிபுரிவாராக. ஒரு காரியம் மாத்திரமே எனக்கு வேண்டும், அதுதான் அவருடைய வார்த்தையின் மூலமாக, இயேசு கிறிஸ்துவின் ஆதரவு. நான் சத்தியத்தையே சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று அவர் தம்முடைய வார்த்தையின் மூலம் நிரூபித்துக்காட்டுவாராக; போலியான பாவனை செய்கிற, நேர்மையற்ற ஏதோவொரு காரியமல்ல; ஆனால் இந்நாளின் வாக்குத்தத்தத்தை எடுத்து அது சத்தியம் என்று காண்பிக்கிற அசலான பரிசுத்த ஆவியானவர் தாமே. நான் காண ஏங்குவது எல்லாம் அதுதான். இயேசு, "நான் என்னுடைய பிதாவின் கிரியைகளை செய்யவில்லை என்றால், என்னை விசுவாசிக்காதீர் கள்" என்று சொன்னதுபோல. 69. இப்பொழுது குருடனே! ஓ, நீங்கள், "நாங்கள் குருடரல்ல" என்று கூறுகிறீர்கள். நீங்கள் குருடர் தான்! நீங்கள் குருடர் தான் என்று வேதாகமம் கூறுகிறது. இது லவோதிக்கேயா சபைக்காலம் என்று ஒவ்வொரு வேதவாசகருக்கும் தெரியும். எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? அதன்பிறகு, வேதாகமம், "லவோ திக்கேயா சபையானது குருடாகவும், நிர்வாணியாகவும் இருந்தும் அதை அறியவில்லை" என்று கூறுகிறது. அங்கேதான் மோசமான பாகம் இருக்கிறது, அவள் அதை அறியக்கூட இல்லை. மற்ற எல்லா சபைக் காலங்களையும் ஒன்றுகூட்டுவதைக் காட்டிலும் அவள் மோசமாக இருக்கிறாள். 70. "காளை தன் எஜமானின் மாட்டுதொழுவம் அல்லது தொழுவத்தையும், கோவேறு கழுதை தன்னுடைய தீனித்தொட்டியையும் அறியும், என் ஜனங்களோ அறியவில்லை" என்று அவர் சொல்லியிருக்கிறார். 71. குருடர், ஆவிக்குரிய குருடர்! எதற்கு குருடாக இருக்கிறார்கள்? தேவனுடைய வார்த்தைக்கு. அவர்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு குருடாக இருக்கிறார்கள், அவர்கள் அதைக் காண விரும்புவதில்லை. நீங்கள் அவர்களிடம் சொல்லிப்பாருங்கள்; அவர்கள், "ஓ, ஆமாம், நான்-நான் அதைச் செய்யதான் நினைக் கிறேன்" என்று கூறுவார்கள், ஆனால் அவர்கள் யாரு மே அதைச் செய்வதில்லை. அவர்கள் அதைச் செய்து கொண்டே ஒரு ஸ்தாபனத்தில் தங்கள் ஐக்கியத்தை தொடர முடியாது; அவர்கள் சரியாக இவர்களை அதைவிட்டு உதைத்து வெளியேற்றி விடுவார்கள். 72. அங்கே தான் அவள் நிற்கிறாள், தெலீலாள் அவனுடைய ஜடைகளை மழித்து எடுத்துவிட்டாள். இப்பொழுது, அதிலே பெண்களைப் போன்றே, அவனுக்கு - அவனுக்கு தலைமயிர் கத்தரிக்கப்பட்டு குட்டையாக உள்ளது, அதே காரியம் தான். இப்பொழுது அவர்களை நோக்கிப்பாருங்கள், அப்படியே அவர்கள் இருந்ததைப் போன்றே தோற்கடிக்கப்பட் டிருக்கிறார்கள். 73. ஊழியக்காரர்கள், முற்காலத்திய நாட்களின் பெந்தெகோஸ்தே செய்தியாளர்கள், தேவனுடைய வார்த்தையின் மூலமாக, தாங்கள் குற்றங்கண்டு, அவைகளைவிட்டு வெளியே வந்த, வேதாகம கல்லூரிகளை தங்களுடைய சொந்த பிள்ளைகளே ஸ்தாபிப்பார்க ளென்று அம்மனிதர்களை நீங்கள் ஒருபோதும் நம்பச் செய்திருக்க மாட்டீர்கள். அது சரியே. இந்த வேதாகம கல்லூரிகளின் மூலமாக, நாம் எதைப் பெற்றிருக்கிறோம்? அவர்கள் உலகத்தை சபைக்குள்ளே கொண்டு வந்து விட்டார்கள். ஒரு வயதான ஊழியர் வழக்கமாக (இவ்வாறு) பாடுவதுண்டு: நாம் வாயிலின் குறுக்கு கம்பிகளை எடுத்துவிட்டோம், பாவத்தோடு சமரசம் செய்துகொண்டோம். நாம் வாயிலின் குறுக்கு கம்பிகளை எடுத்துவிட்டோம், செம்மறியாடுகள் வெளியே போய்விட்டன, ஆனால் இந்த வெள்ளாடுகள் எப்படி உள்ளே வந்தன? 74. நீங்கள் வாயிலின் குறுக்கு கம்பிகளை எடுத் துவிட்டு, வார்த்தையிலிருந்து தூரமாகப் போய்விட்டீர்கள். ஏவாள் சாத்தானுடைய அறிவுத்திறம் வாய்ந்த விவேகத்திற்கு வாயிலின் குறுக்கு கம்பிகளை எடுத்துவிட்டபோது, மரணம் உள்ளே வந்தது; தேவன் அவளை உள்ளே வைத்து மூடியிருந்த தடுப்புகள் என்னவென்றால், அவருடைய வாக்குத்தத்தமான வார்த்தை தான். நாமோ வார்த்தைக்குப் பதிலாக வேறு ஏதோவொன்றையோ, ஒரு சமயக்கோட்பாட்டையோ மாற்றீடு செய்துவிட்டோம். ஆமென். அது சத்தியம் என்று உங்களுக்குத் தெரியும் 75. இன்றுள்ள பெந்தெகோஸ்தே ஜனங்களாகிய நாம் எதைப் பெற்றிருக்கிறோம்? மிக அநேக ரிக்கிகளைத்தான் பெற்றிருக்கிறோம். சிறிது காலங்களுக்கு முன்பு, அந்த வார்த்தையை, எல்விஸ் மற்றும் ரிக்கி ஆகிய அதைக்குறித்து நீங்கள் ஒருபோதும் கேள்விப் பட்டதில்லை. அது ஒரு வார்த்தை, அது இந்நாளுக் கான பெயராயுள்ளது. அது இதனோடு ஒருங்கிணை கிறது. அது ஏதோவொன்றை அர்த்தப்படுத்துகிறது. 76. நீங்கள், "ஒரு பெயர் எதையும் அர்த்தப்படுத்துவது கிடையாது" என்று கூறலாம். அப்படியானால் அவர் ஏன் ஆபிராமின் பெயரை ஆபிரகாம் என்று மாற்றினார்? அவர் ஏன் சவுலுடைய பெயரை பவுல் என்று மாற்றினார்? சீமோனுடைய பெயரை பேதுரு என்று மாற்றினார்? அவர் ஏன் தம்முடைய சொந்த பெயரை மாற்றினார்? 77. அவர் ஏன் யாக்கோபை இஸ்ரவேல் என்று மாற்றினார்? அவன் கர்த்தரோடு போராடும் மட்டுமாக, அவன் ஜெயங்கொள்ளும் மட்டுமாக அவ்வாறு மாற்றவில்லையே. இயேசு மரணத்தையும், பாதாளத்தையும், கல்லறையையும் ஜெயங்கொண்டபோது, "அவர் ஒரு புதிய நாமத்தை உடையவராயிருந்தார்" என்று வே தாகமம் கூறுகிறது. மேலும் யாக்கோபு ஜெயங்கொண்ட போது. 78. சபையால் ஜெயங்கொள்ள முடியுமானால், அவள், "நான் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, மற்றும் பிரஸ்பிடேரியன்" என்று சொல்லிக்கொண்டிருப்பதை நிறுத்துவாள். அவளால் தன்னுடைய சமயக்கோட் பாடுகளையும் அங்கே அவளை உள் இழுத்திருக்கிற உலகத்தையும் ஜெயங்கொள்ள முடியும்போது தான், திருமதி. இயேசு கிறிஸ்துவாகிய, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியிடம் அவள் திரும்பி வருவாள். ஆமென். சிம்சோன் அங்கே நின்றுகொண்டிருப்பதை நாம் காண்கையில், என்னவொரு வருத்தமான காட்சி! 79. குட்டை தலைமயிர் வைத்துக்கொண்டும், குட் டை உடைகளை அணிந்துகொண்டும், அழகுசாதனங்கள் பூசப்பட்ட முகங்களையும் உடைய பெண்கள்; மற்றும் கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டு, பாடகர் குழுவிலும் பாடுகிற, பெந்தெகோஸ் தேயினர். 80. சமீபத்தில் பிரபலமான, மகத்தான மனிதர் வசிக்கிற ஒரு மகத்தான பட்டணத்திலுள்ள பெந்தெகோஸ்தே சபையில் (Pentecostal Assembly) நான் இருந்தேன். கூட்டங்கள் மிகப்பெரியதாக ஆனதால், நான் அதை ஒரு பெரிய இடத்திற்கு கொண்டுபோக வேண்டியிருந்தது, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பெந் தெகோஸ்தே பாடகர் குழுவை உடையவர்களாய் இருந்தார்கள். நான் சரியாக கீழே அந்தத் திரைகளுக்குப் பின்னால் இருந்து, ஜெபித்துக்கொண்டிருப்பதை அவர்கள் சிறிதளவே அறிந்திருந்தார்கள். அங்கே மேசியா பாடலை பாடும்படியாக, ஏறக்குறைய 35 வாலிப பெண்களும், 35 வாலிபர்களும் உடைய அந்த வரிசையில் இருந்த ஒவ்வொரு வாலிப பெண்ணும், அழகுசாதனபொருட்களை அணிந்துகொண்டும் தலைமயிரை குட்டையாக கத்தரித்துக்கொண்டும் இருந்தார்கள். டேவிட் டூப்பிளஸ்ஸிஸ் அவர்கள் மிஷனரி காணிக்கை எடுத்தபோது, அவர்கள் குருடனாகிய பர்த்திமேயுவாய் இருப்பதைப் போன்று நடித்துக் கொண்டும், கிண்ணத்தை கடந்துபோகச் செய்துகொண் டும் (passing the cup) அதனூடாக விரைந்துசென்று கொண்டும் இருந்தார்கள். அது பெந்தெகோஸ்தே பேரக்குழந்தைகள். அது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை கொண்ட தேவனுடைய ஒரு பெந்தெ கோஸ்தே ஊழியக்காரன் அல்ல. பரிசுத்த ஆவியானவர் தமது சொந்த வார்த்தையையே ஏளனம் செய்ய மாட்டாரே. அவர் அவ்விதம் செய்து பரிசுத்த ஆவியாகவே தொடர்ந்து இருக்க முடியாது. ஆனால் நீங்கள் அங்கே தான் அடைந்திருக்கிறீர்கள். ஓ, சிம்சோன், சற்றே சிந்தித்துப்பார்க்கும்போது! 81. இந்த ஒலிநாடாக்கள் பதிவுசெய்யப்பட்டு உலகம் முழுவதும் அனுப்பப்படுகின்றன என்பது நினைவில் கொள்ளுங்கள். நான் வெறுமனே இங்கேயிருக்கும் இந்த கூட்டத்தினருக்கு மட்டும் பேசிக் கொண்டிருக்கவில்லை. 82. சிம்சோன் தன்னுடைய தவறுகளை சிந்தித்துப் பார்க்கத் தொடங்குகிறான். ஓ! ஒருகாலத்தில் அவன் எப்படியிருந்தான் என்பதைக் குறித்து சிந்திக்கத் தொட ங்கினான். 83. பெந்தெகோஸ்தேயினரே, 1900 வருடங்களுக்கு முன்பு, நீங்கள் எப்படியிருந்தீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். சபையே, கத்தோலிக்கர்களே, புரட்டஸ்டன்டுகளே, நீங்கள் 1900 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தீர்கள் என்று சிந்தித்துப்பார்த்து, இன்று நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். சற்றுநேரம் நோக்கி ஆராய்ந்துபாருங்கள். என்னுடைய வாக்குறுதியை காத்துக்கொள்ள இன்னும் ஏறக்குறைய எட்டு நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது. 84. கவனியுங்கள், ஆனால் அவன் அங்கே நின்று கொண்டிருக்கையில், அவன் அழுது, தன்னுடைய தவறுகளைக் குறித்து சிந்தித்துப்பார்க்கத் தொடங்குகிறான். அவன் எப்படியிருந்தான்... அவனுக்கு சம்பவித்தது என்ன என்பதைக் குறித்து அவன் சிந்திக்கத் தொடங்கினபோது. அவன் குருடாயிருந்தான், எனவே இனி அவனால் பார்க்க முடியாது, அவன்-அவன் இந்தப் பெண்ணுடைய அன்பின் நிமித்தமாக, வேறு ஏதோவொன்றை ஏற்றுக்கொண்டிருந்தான், அதுதான் உணர்ச்சிமூலமாக அவனை வசப்படுத்தியது, அதன் பிறகு அவள் அவனை புறக்கணித்து விட்டாள். 85. ஓ, சாத்தான் சபைக்காக வைத்திருக்கிறான் என்று நான் இங்கே பேசக்கூடியது என்னவொரு கண்ணியாக இருக்கிறது. அப்படியே உங்களுடைய கண்களை சத்தியத்திலிருந்து குருடாக்கி விடுகிறான், அதுதான் அது, அப்பொழுது அவர்கள் உங்களைப் பிடித்துவிட்டார்கள். நீங்கள் மாத்திரம் அதை அறிந் திருந்தால்! இந்நாட்களில் ஒன்றில், தேவன் அதை, மிருகத்தின் முத்திரை என்றால் என்னவென்று, உங்களுக்கு நிரூபித்துக்காட்டப் போகிறார். உ - ஊ. கவனியுங்கள், ஆனால் ஒருமுறை குருடானபோது, அதோ அவள் நிற்கிறாள். 86. அங்கே அவன் நின்றுகொண்டிருந்தான். அவன் தன்னுடைய தவறான காரியங்களையும், அந்த நேரான குறுகலான பாதையை அவன் எங்கே விட்டு அகன்றுபோயிருந்தான் என்பதையும், அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்திலிருந்து எங்கே விலகிச்சென் றிருந்தான் என்பதையும் நினைவுகூரத் தொடங்கினான். அவன், "கர்த்தாவே, என்னுடைய கண்களுக்காக பழிவாங்கும்!" என்று சத்தமிட்டான். அவன் ஏன் இவ்வாறு சத்தமிட்டான்? ஒரு சாத்தியக்கூறு இருந் ததை அவன் அறிந்திருந்தான். இப்பொழுது அங்குதான் நீங்கள் கவனம்செலுத்த விரும்புகிறேன். 87. சிம்சோன் தான் எங்கு பாதையை விட்டு அகன் றுபோயிருந்தான் என்ற எல்லாவற்றையும் குறித்து நிச்சயமாக சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். இப்பொ ழுதோ அது மிகவும் காலதாமதமாகிவிட்டது என்பதை அப்போது அவன் கண்டான். அவன் எங்கு பாதையை விட்டு அகன்றுபோயிருந்தான் என்பதை அவன் கண்டு, "தேவன் பதிலளிப்பார் என்ற ஒரு சாத்தியக் கூறு நிச்சயம் இருக்க வேண்டும்" என்று எண்ணினான். அவன் மனந்திரும்பி தன்னுடைய தவற்றுக்காக வருத்தப்படுவதை தேவன் காணும்படி செய்ய முடிந்தால், தேவன் இப்போதும் கூட தம்முடைய வாக்குத்தத்தத்தை செய்துமுடிப்பதற்கான ஒரு சாத்தியம் இருந்ததை அவன் அறிந்திருந்தான். 88. தேவன் அதைச் செய்வார். அவர் அதைச் செய்யப்போகிறார். இப்பொழுதும் அதுவே தான், தேவன் அந்த சபையைக் கொண்டிருக்கத்தான் போகிறார்! நீங்கள் கவலைப்பட வேண்டாம், அவள் அங்கே இருக்கத்தான் போகிறாள். சபையும் கிறிஸ்துவும் ஒரே மாதிரியான ஆவியாக இருக்கும் அளவுக்கு பரிசுத்த ஆவியானவர் அவ்வண்ணமாக சபையில் அசைவாடுவார். லூத்தர் அக்காலத்தில் நீதிமானாக்கப்படுதலில் காலூன்றி நின்றார்; வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதலைக் குறித்த அன்பின் இதயத்துடிப்பில் நிலைகொண்டிருந்தார்; ஆனால் இப்பொழுதோ இது மேலே தலைக்கு உயர்ந்து விட்டது; பாருங்கள், அதைக்காட்டிலும் இன்னும் அதிகமாக. அவள் ஸ்தாபித்துக் கொண்டாள். நிலத்தைப் பயிரிடுகிறவன் வந்து திராட்சைகொடியை கிளைநறுக்கி திருத்தம் செய்தான்; அவர்கள் மரித்து விட்டார்கள், அவர்கள் இனி ஒருக்காலும் திரும்ப வரவேயில்லை. அவர்கள் இனி ஒருபோதும் திரும்ப வரமாட்டார்கள். ஆனால் வந்துகொண்டிருக்கிற ஒரு ஜீவ வித்து இன்னும் அங்கேயுள்ளது. 89. ஆனால், கவனியுங்கள், அங்கே நிச்சயம் ஒரு-ஒரு சாத்தியக்கூறு இருக்க வேண்டுமென்று சிம்சோன் எண்ணினான். அவன் அந்த யோசனையை பற்றிப் பிடித்துக்கொண்டான். 90. ஆனால் வருத்தமான பாகம் என்னவென்றால், இன்று சபையோ அதை கண்டுபிடிக்கவில்லை. ஒரு எழுப்புதலுக்கான வாய்ப்பு உள்ளது என்பதை அவர்கள் உணருவதில்லை. அந்த வாய்ப்பை அவர்கள் உணருவது கிடையாது. அவர்கள் இன்னும் அந்த தரிசனத்தை அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் வெறு மனே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். 91. "ஓ," அவர்கள், "இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாமே, நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர்?" என்று கேட்கலாம். 92. ஓ, நீங்கள் உங்கள் கைகளை கொட்டி மகத்தான பெரிய கூட்டங்களையும், உலகப்பிரகாரமான அற்ப பகட்டை உடைய மினுமினுப்பையும் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் மிகப்பெரிய ஸ்தலங்களுக்குப் போக வேண்டியிருக்கிறது. நீங்கள் பெரும்பாலான, மிகச்சிறந்த மகிழ்விப்பவர்களைக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் இதை, அதை, அல்லது மற்றதை செய்தாக வேண்டியிருக்கிறது. உங்கள் மேய்ப்பர் கட்டாயமாக டாக்டர் பட்டத்தை உடைய வேதாகம கல்லூரியின் அறிவுத்திறம் வாய்ந்த ஒருவராக இருந்தாக வேண்டும். அல்லது, உங்கள் மேய்ப்பர் இரட்சிக்கப்பட்டு, அங்கே வெளியிலுள்ள சோளவயலிலிருந்து (வந்த) ஏதோவொரு சிறு மனிதர் என்று அங்கேயுள்ள உங்கள் அண்டைவீட்டார்களிடம் சொல்ல முடியாது. அவர், "எங்கள் மேய்ப்பர் டாக்டர் LL.D. இன்னார் இன்னார்." எனக்கோ, அவர் அப்படியே தேவனிடமிருந்து அவ்வளவு அதிக தூரமாக இருக் கிறார் என்றே அது அர்த்தப்படுத்துகிறது. அவ்வளவு தான், அப்படியே அவ்வளவு அதிக தூரத்தில், அறிவாற்றல்கள் எப்போதுமே அவரை தூரமாக கொண்டுபோய் விடுகிறது. ஓ, நீங்கள் கல்வியினாலே பளபளப்பாயிருக்கிறீர்கள். 93. வேறொரு காரியம் என்னவென்றால், இன் றைக்கு இந்த நவீன சுவிசேஷ பணிகளில் ஏறக்குறைய ஏராளமானவைகள், பெந்தெகோஸ்தேயினர் முதல் முற்றிலுமாக, நீண்ட காலத்திற்கு முன்பே, ஒருகூட்ட ஹாலிவுட் நடிகர்களின் சாமர்த்தியமாகத்தான் (அது) உள்ளது. ஆமாம், மீன் தேவனாகிய தாகோனின் மண்டபத்திலிருந்த அந்த மினுக்கு பொருள்களைப் போன்றே நீங்கள் நிச்சயமாக அதைக்கொண்டு பளபளப்பாக மின்னிக்கொண்டு தான் இருக்கிறீர்கள். ஆனால் அந்த சரிகையும் கல்வியும், ஒரு மகத்தான பளபளப்போடு கூட அறிவாற்றலுள்ள நடிகர்களின் சாமர்த்தியமும், ஏதாவது வெற்றிகொள்வதையோ மற்றும் அதைப்போன்றவற்றையோ, அதைப்போன்ற அக்காரியங்கள் எல்லாவற்றையும் பொதுஜனங்கள் எவரும் காணும்படி செய்யாது, சுவிசேஷத்தின் அறிவாற்றலுள்ள கருத்துக்கள் மற்றும் அதைப்போன்றவைகள், பெண்கள் கத்தரிக்கப்பட்ட குட்டை தலைமயிர் அணிவதை நிறுத்தும்படி செய்யவோ, மனிதர்கள் அவர்கள் இருக்க வேண்டியது போன்று நடந்து கொண்டு, வீட்டில் தங்களுடைய ஸ்தானத்தை எடுத்து, அவர்கள் வளர்க்க வேண்டியதுபோன்று தங்கள் பிள்ளைகளை வளர்க்கும்படி செய்வதற்கு தேவனுடைய வல்லமையை அது கொண்டுவராது. அது தேவனுடைய ஆவியை கொண்டுவராது. சிம்சோன், தான் எப்பொழுதும் இருப்பதைப் போன்றே பெரிய பருமன் கொண்டவனாக, அங்கே நின்றுகொண்டிருந்தான். 94. சபையானது நாற்பது வருடங்களுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் அங்கத்தினர்களில் வலுவாக உள்ளது, ஆனால் தேவனுடைய ஆவி எங்கே? ஓ, என்னே! அதில் தேவனுடைய ஆவி எங்கேயுள்ளது? ஹாலிவுட்டின் ஆவியைத்தான் நான் காண்கிறேன். உலகத்தின் ஆவியைத்தான் நான் பார்க்கிறேன். வசீகரத்தின் ஆவியைத்தான் நான் பார்க்கிறேன். சரியாக உன்னிப்பாக நோக்கிப்பாருங்கள், நான் அதற்கு விரோ தமாக 15 வருடங்கள் பிரசங்கம் பண்ணிக்கொண்டு வருகிறேன், அது அப்படியே எல்லா நேரமும் இன்னும் மோசமாகிக்கொண்டு தான் இருக்கிறது. என்னால் அதைக் காண முடிகிறது, அங்கேயுள்ள அந்த ஆவியை என்னால் காண முடிகிறது. ஆனால் தேவனை உறுதியாகப் பற்றிப்பிடிக்கக்கூடிய, வார்த்தையானது வெளிப் படுத்திக்காட்டப்படும்போது வார்த்தையை தானே அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய, சத்தியத்தை அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய தேவனுடைய ஆவி எங்கேயிருக்கிறது? தேவனுடைய ஆவி மாத் திரமே அதைச் செய்ய முடியும். அது சரியே. நீங்கள் மினுமினுப்பையும், மெருகூட்டலையும், கவர்ச்சிகரமாக பொதுஜனங்களுக்கு காட்டும் திறமையையும் ஏற்றுக்கொள்ளலாம். 95. சிம்சோனுக்கு எப்பொழுதும் இருந்ததைப் போன்று பெரிய சரீரம் இருக்கத்தான் செய்தது, ஆனால் அவனுடைய பலமோ அவனைவிட்டு எடுக்கப்பட் டிருந்தது. 96. பெந்தெகோஸ்தே சபை இன்று நிற்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு என்று நம்புகிறேன், கத்தோலிக்க சபையின் ஞாயிறு விசிட்டரில் (Sunday Visitor), "ஒரு வருடத்தில் கத்தோலிக்கத்திற்கு பத்து இலட்சம் மனமாற்றங்களை தாங்கள் கொண்டிருந்தனர், ஆனால் பெந்தெகோஸ்தே சபைக்கோ அதைக்காட்டிலும் அதிகமாக 15 இலட்சம் மனமாற்றங்கள் கிடைத் தன" என்று கூறப்பட்டிருந்தது. நல்லது, உங்களுக்கு அது கிடைத்தபோது, நீங்கள் எதைப் பெற்றிருக் \கிறீர்கள்? கிறிஸ்துவுக்கு தங்கள் ஜீவியத்தை ஒப்புக் கொடுக்கக்கூடிய ஐந்து பேரையே நான் அதிகம் விரும்பியிருப்பேன். வெளியிலிருக்கும் 40 மில்லியன் பேரைக்கொண்டு அவரால் செய்யக்கூடியதைக் காட்டிலும், ஒப்புக்கொடுக்கப்பட்ட ஐந்து மனிதர்களைக் கொண்டோ, அல்லது ஒரு மனிதனைக்கொண்டோ அவரால் அதிகம் செய்ய முடியும். அங்கத்தினர்கள் என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? நீங்கள் குருடர்களாயிருந்து, வேசிக்கு இன்னும் கூடுதல் பலத்தை கூட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்ற வேறொரு காரியத்தை மட்டுமே அர்த்தப்படுத்துகிறது. சரி. கவனியுங்கள், இன்றைய சபைக்கு கிரயத்தைச் செலுத்த விருப்பமில்லை. 97. சிம்சோன் சரியானவிதமான ஒரு ஜெபத்தைச் செய்தான், "கர்த்தாவே, இந்த சத்துருவோடு கூட நான் மடியட்டும்." ஓ, என்னே! 98. அவ்விதமாகத்தான் அது உள்ளது. நீங்கள் உங்கள் அகங்காரத்திற்கு மரிக்க விரும்புவதில்லை. நீங்கள் உலகத்தின் காரியங்களுக்கு மரிக்க விரும்புவதில்லை. 99. இப்பொழுது, நான் இதைச் சொல்லிக்கொண்டி ருக்கும்போது, உண்மையில் உலகம் எங்கும் ஆயிரக்கணக்கானவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். பாருங்கள்? நான் வெறுமனே இங்கே சிகாகோவில் மட்டும் பேசிக்கொண்டிருக்கவில்லை. நான் உலகத்தை நோக்கித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். 100. நீங்கள் மரிக்க விரும்புவதில்லை, ஆனால் ஒரு எழுப்புதலுக்கான சாத்தியக்கூறு இருப்பதற்கான ஒரே வழி அதுதான். குருட்டு சிம்சோனே, தெலீலாள் உன்னுடைய கண்களை குருடாக்கிவிட்டாள் என்பதை உன்னால் காண முடியவில்லையா? நீங்கள் எப்பொ ழுதாவது பலத்தை திரும்பவும் சபைக்குக் கொண்டுவர கூடிய ஒரே வழி என்னவென்றால், இந்த உலகப் பிரகாரமான கொள்கைகளுக்குள் உங்களை பிடித்து விட்ட சத்துருவுக்கு மரிக்க வேண்டும் என்பதுதான். சிம்சோன், "நான் சத்துருவோடு கூட மடியட்டும்" என்றான். 101. செலுத்த வேண்டிய ஒரு பெரிய கிரயம் அங்கேயுள்ளது. இந்தக் காரியத்திற்குள் உங்களைக் கொண்டு வந்திருக்கிற அக்காரியத்துக்கு நீங்கள் நிச்சயம் மரித்துதான் ஆகவேண்டும். பெந்தெகோஸ்தே ஜனங்களே, இந்தப் பிற்பகலில் நீங்கள் இருக்கும் நிலைக்கு உங்களைக் கொண்டுவந்திருக்கிற அந்தக் காரியத்திற்கு நீங்கள் நிச்சயம் மரித்துதான் ஆக வேண்டும். நீங்கள் அதற்கு மரித்தாக வேண்டும். 102. சிம்சோன் தேவனுடைய வல்லமையை மீண்டும் தன்னுடைய ஜீவனுக்குள் திரும்ப கொண்டு வருவதற்கான கிரயத்தைச் செலுத்த விரும்பினான். 103. இந்தப் பிற்பகல் வேளையில், அப்படியே தேவனுடைய வல்லமையானது மறுபடியும் உங்கள் மேல் திரும்புவதைக் காணவும், இயேசு கிறிஸ்துவின் ஒரு சிறைக்கைதியாக ஆவதற்கும், சபையானது கிரயத்தைச் செலுத்தி, சத்துருவோடும், அந்தக் காரியத்தோடும், உங்களுக்கிருக்கும் புகழ் எல்லாவற்றோடும், உங்களுடைய இந்த, அந்த, அல்லது மற்ற எல்லாவற்றோடும் கூட மரிக்க விருப்பமுள்ளவர்களாக இருக்கிறீர்களா என்று வியப்படைகிறேன்? 104. ஓ, உங்களில் சிலர், "ஓ, ஆமாம், நாங்கள், எங்களுக்கு எழுப்புதல்கள் உள்ளன" என்று கூறுவதை நான் கேள்விப்படுகிறேன். ஆனால் அது ஸ்தாபன எழுப்புதல்கள். ஒருத்துவக்காரர் திரித்துவக்காரர் (Threeness) யாவரையும் எடுத்து அவர்கள் எல்லா ரையும் ஒருத்துவக்காரராக ஆக்க விரும்புகிறார்கள். திரித்துவக்காரர் ஒருத்துவக்காரர் எல்லாரையும் எடுத்து அவர்களை திரித்துவக்காரராக ஆக்க விரும்புகிறார்கள். சர்ச் ஆப் காட் சபையானது தீர்க்கதரிசன சர்ச் ஆப் காட் சபையை எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். ஒருவர் மற்றவரை எடுத்து, பெரிய ஸ்தாபனமாக ஆக்க விரும்புகிறார்கள். நீங்கள் மனிதர்களுக்கு பொழுது போக்களித்து மகிழ்விக்க மாத்திரமே செய்கிறீர்கள் என்பதை நீங்கள் உணரவில்லையா? 105. நாம் சகோதரர்களாக இருக்கிறோம். எந்த ஸ்தாபனமும் தேவனுடைய அன்பை விட்டு பிரிக்க முடியாது. நாம் சகோதரர்களாக இருக்கிறோம். "நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லா மனிதரும் அறிந்துகொள்வார்கள்." "அப்படியானால் நீர் ஏன் அவர்களைக் குறித்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறீர்" என்று கேட்கலாம். 106. அன்பு திருத்துகிறதாயிருக்கிறது. அன்பானது திருத்தவில்லை என்றால், அப்பொழுது அது அன்பல்ல. உங்களுடைய பிள்ளை வீதியில் இருப்பதை நீங்கள் கண்டும், அவனுக்கு பிட்டத்தில் கையால் ஒரு சின்னஞ்சிறிய அடிகொடுக்கவில்லை என்றால், நீங்கள் - நீங்கள் ஒரு நல்ல தகப்பனல்ல. ஆனால் ஒரு உண்மையான தாயோ அல்லது தகப்பனோ அவனைக் கண்டுபிடித்து அவனுக்கு கையால் பிட்டத்தில் அடி கொடுத்து, அவன் வீதியைவிட்டு போக வேண்டுமென்றும் அல்லது மாண்டுபோவான் என்றும் அவனை அறிந்துகொள்ளச் செய்வீர்கள். அதுவே நிஜமான அன்பு. ஆனால், "மகனே, அன்பே, எனக்குத் தெரியவில்லை. இந்த கார்கள் மிகவும் வேகமாக போய்க் கொண்டிருக்கும்போது, நீ ஒருக்கால் நாளின் இந்த நேரத்தில், கடைசி நேரத்தில், அங்கே வெளியே இருக் கக்கூடாது" என்று சொல்லுவது என்பது. ஓ, முட்டாள் தனம், தேவனுடைய வார்த்தையை எடுத்து வெள்ளையை வெள்ளை என்றும் கறுப்பை கறுப்பு என்றும், சரியை சரியென்றும் தவறை தவறென்றும் அழைக்க துணிச்சல் இல்லாத பெண்தன்மை கொண்ட பிரசங்கியே. ஆனால் அவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். 107. ஆமாம், நமக்கு எழுப்புதல்கள் உள்ளது சரிதான், ஆனால் இந்த எழுப்புதல்களுக்குப் பின்னா லுள்ள உங்கள் ஒழுக்கம் சார்ந்தவைகளைக் கவனித்துப் பாருங்கள். அவைகளை கொஞ்சமும் மாற்றாமல், எல்லா நேரமும் தேவனைவிட்டு தூரமாக போய், உலகத்திற்குப் போகிறீர்கள். கவனியுங்கள். 108. சிம்சோன் தன்னுடைய ஜெபத்திற்கு பதில் கிடைக்குமானால், என்ன சம்பவிக்கப் போகிறது என்ப தை அறிந்திருந்தான். 109. ஆனால் நாமோ இன்னும் கிரயத்தை எண் ணிப்பார்க்கவில்லை (haven't counted). ஒரு உண்மையான, அசலான தேவனுடைய பிள்ளையாக ஆவதற்கான உங்களுடைய ஜெபத்திற்கு தேவன் பதிலளிப்பாரானால், என்ன சம்பவிக்கப்போகிறது? சரியாக அப்பொழுதே, நீங்கள் உங்கள் ஸ்தாபனத்தைவிட்டு போய்விடுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒருவகை சீட்டாட்டம் (play bridge) விளையாடும் அந்தப் பெண்களையும் மற்றும் எல்லாவற்றையும் விட்டு போய்விடுவீர்களா? ஓ, இல்லை! நீங்கள் மரித்துவிட்டீர்கள், அவ்வளவு தான். முதலில், அதை கணக்குபோட்டுபாருங்கள் (count it up). 110. ஆனால் சிம்சோனோ, "நான் மடியட்டும்" என்றான். அவன் கிரயத்தைச் செலுத்த விருப்பமுள்ளவனாயிருந்தான். மேலும் ... என்று அவன் அறிந்திருந் தான். 111. இப்பொழுது இந்த கருத்தைக் கூர்ந்து கவனியுங்கள். அவனுடைய தற்போதைய பின்மாற்றமடைந்த நிலையானது அந்த மணிநேரத்திற்கான சவாலை ஒரு போதும் எதிர்கொள்ள முடியாது என்பதை அவன் அறிந்திருந்தான். இப்போதும்கூட, அவனுடைய தசை களில், அவன் எப்பொழுதும் இருந்ததைப்போன்றே அவ்வளவு அதிகம் மனிதனாகத்தான் இருந்தான். அவனுடைய உடலமைப்பானது, அது எப்பொழுதும் இருந்ததைப்போன்று அவ்வளவு பெரிதாகத்தான் இருந்தது. அவன் எப்பொழுதும் எந்நேரத்திலும் தன்னுடைய கையில் பெருக்கிக்காட்ட முடிவது போன்று அவ்வளவு பெரிய தசைநார் அவனுக்கு இருந்தது, அது அநேகமாக பெரிதாகவே இருந்திருக்கும், ஏனென்றால் அவன் அரைத்துக்கொண்டிருந்தான்... கனமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தான். 112. நமக்கு சிறந்த சபைகளும், சிறந்த கட்டிடங்க ளும் மற்றும் எல்லாமும் உள்ளன, ஆனால் நம்முடைய பலம் எங்கே, ஆவிக்குரியவிதமாகப் பேசிக்கொண்டிருக்கிறேன்? ஓ, ஒரு தீர்மானம் செய்ய தேசத்தில் அனைவரிடமும் நம்மால் கேட்க முடியும் தான், நிச்சயமாக, நம்மால் இவைகளைச் செய்ய முடியும், ஆனால் நான் அதை-அதைக்குறித்து பேசிக்கொண்டிருக்கவில்லை. தேவனுடைய பிரசன்னத்தை நமது மத்தியில் அடையாளம் கண்டு கொள்வதைக் குறித்துதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். அதற்காகத்தான் நாம் ஜீவிக்க வேண்டும். 113. அவனுடைய பின்மாற்றமடைந்த நிலையானது அந்த மணிநேரத்தின் சவாலை எதிர்கொள்ள முடியாது என்பதை அவன் அறிந்திருந்தான். 114. அவ்வண்ணமாகவே சபையும் இப்பொழுது அதை அறிந்துள்ளது. இந்த நிலையின் கீழ் நம்மால் அதைச் செய்ய முடியாது. உங்களால் அதைச்செய்ய முடியாது. ஸ்தாபனங்கள் வார்த்தையை சரி என நிரூபித்துக்காட்ட முடியாது; அது வார்த்தையை மறுதலிக்கிறது. அதே ஸ்தாபனம் தாமே ஸ்தாபிக்கப்பட்ட உடனேயே வார்த்தையை மறுதலிக்கிறது. அப்படியே அந்தக் காரியம் தாமே, துவக்க முதலே, நீங்கள் மறுபக்கத்திற்கு போய்விடுகிறீர்கள். அது வார்த்தையை மறுதலிக்கிறது. எல்லா நேரமும்... 115. எனக்கு வெறும் கொஞ்ச நேரமே அல்லது இரண்டு நிமிட நேரமே உள்ளது. ஆனால் நான் இப்பொழுது துரிதப்படுத்தி எனது வாக்கை காத்துக் கொள்கையில், கவனியுங்கள். 116. அவர்கள் எல்லாரும் அங்கே நின்றுகொண்டி ருக்கையில், எல்லா நேரமும் அவர்களுடைய சிந்தையினூடாக இந்த எண்ணங்கள் கடந்துபோய்க் கொண்டிருந்தன; அது உங்களுடைய சிந்தையினூடாகவும் சிறிது போகும்படி செய்கிறது என்று நான் நம்புகிறேன். சிம்சோன், அவனுடைய சிந்தனைகள் அவனுடைய மனதினூடாக போய்க்கொண்டிருக்கையில், அவர்கள் ஒருபோதும் கவனிக்கவில்லை. ஒருக்கால் அவர்கள் மதுபானத்தை கடந்துசெல்ல வைத்து, மீண்டும் குடித்திருப்பார்கள். அவர்களுடைய அருமையான ஹாலி வுட் பெண்கள் அப்படிப்பட்ட ஒரு காரியம் அந்நாளில் இருந்திருந்தால், தங்கள் வாயில் தங்களுடைய சிகரெட் டுகளோடு கூட அங்கே நின்றுகொண்டிருந்தார்கள்; அவர்கள் அந்த நாளில் அவ்வளவு மிகவும் தாழ்ந்த நிலைக்கு போயிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் தங்கள் தலைமயிரை திடுமென உந்தித்தள்ளிக்கொண்டு இன்னும் ஒரு முறை மது அருந்திவிட்டு, "ஹலோ, ஜோசப், அல்லது ஜான், அங்கு மேலே ஏதோவொரு இடத்திலிருப்பவனே, நாங்கள் சென்ற இரவில் ஒன்றாக சீட்டு விளையாடி, வெளியே ஒரு பெரிய கொண்டாட்டத்தில் இருந் தோம்" என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். [ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்.] 117. "தேவன் என்னைக் கேட்டருளுவார் என்ற ஒரு வாய்ப்பு இருக்கிறது. அங்கே ஒரு சாத்தியக்கூறு உள்ளது." அவன் சிந்தித்துக்கொண்டிருக்க, இந்தச் சிறு பையனோ அவனுடைய கைகளை கட்டவிழ்த்து விட்டு, பின்னோக்கி நடந்துபோகையில், அந்த பெலிஸ்தியரோ அவனைக் கவனிக்கவில்லை. அவன், "என்னுடைய கைகளை இந்த தூணின் மேல் வைக்கட்டும்" என்றான். "ஒரு வாய்ப்பு உள்ளது." ஓ, என்னே! 118. சபையானது அதைக் காண முடியும்படி நான் விரும்புகிறேன். ஒரு உண்மையான எழுப்புதலுக்கான சாத்தியக்கூறு உள்ளது. 119. அவன் என்ன செய்தான்? அவன் தன்னுடைய கண் விழிப்பள்ளங்களை மேலே தேவனை நோக்கி ஏறெடுத்தான் அவனுக்கு எந்த கண்களும் இல்லாதிருந்தது. அவன் உத்தமமாக அறிக்கைசெய்து கொண்டிருக்கையில், அவனுடைய உதடுகளின் அசை வை அவர்கள் ஒருபோதும் கவனிக்கவில்லை. 120. வெறுமனே கொஞ்சமாக, "கர்த்தாவே, என் னையும் ஜிம்மையும், ஜோவையும், மற்றும் எங்கள் எல்லாரையும் மன்னித்தருளும். ஆமென்" என்பது நமக்கு அவசியமில்லை. பிரசங்க பீடம் தொடங்கி வாயிற்காவலர் வரையில், ஒரு உத்தமமான சுத்தம் செய்தல் தான் நமக்கு அவசிமாயுள்ளது. 121. ஒருகாலத்தில் அவன் கண்களைக் கொண்டிருந்த கண்விழிப்பள்ளங்களிலிருந்து கண்ணீர்கள் பாய்ந்தோடுவதை அவர்கள் ஒருபோதும் கவனிக்கவில்லை. அவனுடைய உதடுகள் அசைவதையும் அவர்கள் ஒருபோதும் கவனிக்கவில்லை. அவனுடைய கண்கள், உவர்நீர் கண்ணீர்கள் அந்த கண்விழிபள்ளங் களிலிருந்து கீழே பாய்ந்தோடிக்கொண்டிருந்தன. தேவன் இன்னும் ஒருவிசை தமது வார்த்தையை மெய்ப்பித்துக்காட்டும்படி அவன் விரும்பினான், இன் றுள்ள இந்த தெலீலாளிடம், அல்லது இந்த சிம் சோனைப் பார்த்து நான் சொல்வது போன்று, இன்னும் சரியாகச் சொன்னால், "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்!" என்று தேவன் நிரூபித்துக்காட்டும்படி அவன் விரும்பினான். 122. "இன்னும் ஒருவிசை," அவன், "அது சம்பவிக் கும் என்று சிந்தித்தான். ஒரு புதிய ஸ்தாபனமல்ல, ஒரு புதிய குறுகிய கட்சி மனப்பான்மை உடையவர்களை அல்ல, ஆனால் தேவனே, உம்மிடமிருந்து வரும் நிரூபித்துக்காட்டப்பட்ட ஒரு வார்த்தை! நீர் இன்னும் தேவனாக இருக்கிறீர் என்பதை நான் அறிவேன். நான் குருடாயிருக்கிறேன். நான் பாதையைவிட்டு விலகி விட்டேன். நான் வாழ தகுதியற்றவன். நான் இந்த சத்துருவோடு கூட மடிந்துபோவேனாக. அதை அழித்துப்போட நீர் என்னை எழுப்பினீர், நான் உம்மை விட்டுவிட்டேன், கர்த்தாவே, ஆனால் நீர் என்னைக் கேட்டருளுவீர் என்ற ஒரு வாய்ப்பு உள்ளது. இன்னும் ஒருவிசை, கர்த்தாவே, இன்னும் ஒருவிசை!" என்று நினைத்தான். அவன் மிகவும் கருத்தூன்றி ஜெபம் பண்ணினான். என்ன வந்துகொண்டிருந்தது என்பதை அவன் அறிந்துகொண்டான். "கர்த்தாவே, இன்னும் இந்த ஒருவிசை மட்டும்! இயேசு கிறிஸ்து நேற்று இருந்தது போல இன்னும் ஒருவிசை நான் அவரைப் பார்க்கட்டும்!" அவன் ஆழமான உத்தமத்தோடு குற்றத்தை ஒப்புக்கொண்டு, அந்த ஜெபத்தைச் செய்தபோது, கண்ணீர்கள் அவனுடைய கன்னங்களிலிருந்து பாய்ந் துகொண்டிருந்தது! 123. அதுதான் சபைக்கு அவசிமாயுள்ளது. நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்று அறிக்கை பண்ணுங்கள். டாக்டர் ஜோன்ஸ் என்ன சொல்லுகிறார் என்றோ, அல்லது வேறு யாரேனும் ஒருவர் என்ன சொல்லுகிறார் என்றோ கவலைப்படாதீர்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு வெளியே இருந்தால், நீங்கள் தவறாயி ருக்கிறீர்கள் என்று அதை அறிக்கை செய்யுங்கள். "இன்னும் ஒருவிசை, கர்த்தாவே, இன்னும் ஒருவிசை! இன்னும் ஒருவிசை, கர்த்தாவே, இன்னும் ஒருவிசை! இந்த ஸ்தாபனங்களின் பேரிலுள்ள என்னுடைய குருட்டுத்தன்மைக்கு பழிதீரும்! உமது உறுதிப்படுத் துதலைக்கொண்டு இந்த ஸ்தாபன உலகத்தை குலுக்க, எனக்கு பலம் தாரும், கர்த்தாவே. எனக்கு பலம் கொடும், கர்த்தாவே. இன்னும் ஒருவிசை அதை நிரூபித்துக்காட்டும்!" என்று கூக்குரலிடுங்கள். 124. அவனுடைய ஜெபத்திற்கு பதில் கிடைத்தால், என்ன நேரிடப்போகிறது என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் அறிந்திருந்தும், மிகவும் கருத்தூன்றி, "இன்னும் ஒருவிசை, கர்த்தாவே!" என்று கதறிக் கொண்டிருந்தான். அவன் ஜெபித்துக்கொண்டும், அவனுடைய நேர்மையான அறிக்கையைச் செய்து கொண்டும் இருக்கையில், அவனுடைய சரீரத்தின் ஒவ்வொரு தசைநாரும் துடிக்கத் தொடங்கியது. 125. ஓ தேவனே, இயேசு கிறிஸ்துவின் சரீரமானது ஒன்றாக நிற்க முடிந்து, மீண்டும் உண்மையான பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் கொண்டு ஒவ்வொரு தசைநாரும் மற்றும் ஒவ்வொரு அங்கத்தினரும் கிளர்ந்தெழத் தொடங்குவார்களானால்; புதிய அங்கத்தினர்களைக் கொண்டோ, கரங்களைக் குலுக்குவதைக் கொண்டோ, கொஞ்சம் சமயக் கோட்பாட்டைக் கொண்டோ அல்ல. 126. பலமானது அந்தப் பெரிய தசைகளுக்குள் அசையத் தொடங்கி, ஒவ்வொரு தசைநாரும் பின்னி முறுகத் தொடங்கியது. அவன் மறுபடியும் தன்னைத் தானே வழக்கமான நிலையில் உணரத் தொடங்கி, அழுத்தித்தள்ளினான் (twisted out). அவன் அவ்வாறு செய்தபோது, அந்தப் பெரிய சுவர் விழுந்தது. 127. இன்றைக்கு நாம் செய்ய அவசியமாயிருப்பது எல்லாமே, இந்த ஸ்தாபன சுவர்கள் விழுவதைக் காணவும், தேவனுக்கு முன்பாக ஆழமான உத்தமத்தைப் பெற்றுக்கொள்ளவும், தேவனுடைய வார்த்தையை விட்டு குருடாக்கப்பட்ட இந்தக் குருட்டுக்கண்களை சுகமாக்குவதும் தான். 128. சிம்சோன் தான் அழித்துப்போட எழுப்பப்பட் டிருந்தானே அந்த ஒவ்வொரு சத்துருவின் மேலும் முதலில் எப்பொழுதும் பெற்றிருந்ததிலேயே மிகப் பெரிய வெற்றி அதுவாகத்தான் இருந்தது, ஏனென்றால் அவன் அறிக்கை செய்ய விருப்பமுள்ளவனாயிருந்தான். 129. ஓ, பெந்தெகோஸ்தேயினரே, இந்தப் பிற்பக லில் உங்களுடைய ஸ்தானத்தில், தேவனுடைய வார்த் தையைக் குறித்த உங்கள் கடமையின் ஸ்தானத்தில் நில்லுங்கள். மனந்திரும்பி, "தேவனாகிய கர்த்தாவே, இன்னும் ஒருவிசை!" என்று உரக்க சப்தமிட்டு கதறுங் கள். நான் உங்களிடம் ஒரு காரியத்தைச் சொல்லட்டும். உங்களுடைய சத்துரு உங்களை அழித்துப்போடுவதற்கு முன்பாக நீங்கள் உங்கள் சத்துருவை அழித்துப் போடுவதே நல்லது. அது சரியே. பழமை பாணியிலான ஜெபக் கூட்டங்களையும், உண்மையான தேவபக்தி யோடுள்ள மனந்திரும்புதலையும், முழு இரவு பீட ஆராதனையையும் திரும்ப கொண்டு வாருங்கள். ஓ, பெந்தெகோஸ்தேயினரே, எனக்குச் செவிகொடுங்கள்! விலகுங்கள், யேசபேல் உங்கள் நடுவில் கிரியை செய்திருக்கும் இந்த ஒழுக்கக்கேட்டை விட்டு அகன்று போங்கள். அதை விட்டுப்போங்கள், துரிதமாக அதை விட்டுச்சென்று, மீண்டும் கர்த்தருடைய வார்த்தைக்குத் திரும்புங்கள், இந்த ஹாலிவுட்டின் கவர்ச்சிகரமான முறையில் பொதுஜனங்களுக்கு காண்பிக்கும் திறனை (Hollywood showmanship) விட்டு அப்பால் (செல்லு ங்கள் - மொழிபெயர்ப்பாளர்). உங்கள் முழு இருதயத்தோடும் மீண்டும் தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புங்கள். பரிசுத்த ஆவியின் வல்லமைக்கு திரும்புங்கள். பெண்களாகிய நீங்கள் ஸ்திரீகளைப் போன்று உடுத்துங்கள், மனிதர்களாகிய நீங்கள் மனிதர்களைப் போன்று நடந்துகொள்ளுங்கள், தேவனுடைய குமாரர் குமாரத்திகளைப் போன்று நடந்துகொள்ளுங்கள். திரும்புங்கள், ஓ, உங்கள் கழுத்தை நெரித்து குருடாக்குகிற இந்த யேசபேல் முறைமையிலிருந்து திரும்புங்கள். தேவனே ஒரு உண்மையான மனந்திரும்புதலைக் கொண்டிருக்க எங்களுக்கு உதவி செய்யும்; அரை மனதோடு அல்ல, உங்களால் அதைச் செய்ய முடியாது. 130. என்னுடைய நேரம் முடிவுற்றதான இந்த இதே கணத்தில், நான் இன்றிரவு எப்படியாக நினைத்துப் பார்க்கிறேன், நாம் நம்முடைய கால்களை ஊன்றி எழுந்து நின்று, நமது கரங்களை மேலே உயர்த்தி, "கர்த்தாவே, இன்னும் ஒருவிசை! இன்னும் ஒருவிசை, ஓ கர்த்தாவே, இன்னும் ஒருவிசை!" என்று கதற வேண்டும். 131. அதைச் செய்யவும், ஒரு எழுப்புதலைக் காண வும் விரும்பி, இந்த ஹாலிவுட்டின் கவர்ச்சிகரமான முறையில் பொதுஜனங்களுக்கு காண்பிக்கும் திறனுக்கு (Hollywood showmanship) மரிக்க ஆயத்தமாயிருக்கும் அனைவரும் எழுந்து நிற்போம்; மரிக்கவும், "தேவனுடைய வல்லமை களிப்போடு கூட சீயோனுக்கு வருவதையும், அவருடைய பரிசுத்த பர்வதங்கள் எங்கும் தீங்குசெய்வாரோ அல்லது சேதப்படுத்துவாரோ இல்லை" என்பதையும் காண ஆயத்தமாயிருக்கும் அனைவரும், எழுந்து நிற்போம். 132. நாம் நமது கரங்களை உயர்த்தி, "இன்னும் ஒருவிசை, கர்த்தாவே!" என்று கதறுவோம். இன்னும் ஒருவிசை, கர்த்தாவே! இன்னும் ஒருவிசை, கர்த்தாவே! இன்னும் ஒருவிசை, கர்த்தாவே, நீர் பெந்தெகோஸ்தே நாளில் அனுப்பியது போன்று, பலத்த காற்று அடிக்கிற முழக்கத்தோடு கூட, பரிசுத்த ஆவியை அனுப்பியருளும். ஆமென். 2